Home /News /national /

டி.ஆர்.பி பாயிண்ட் கணக்கிடும் பார்க் அமைப்பில் மாற்றம் - என்.பி.டி.ஏ வரவேற்பு

டி.ஆர்.பி பாயிண்ட் கணக்கிடும் பார்க் அமைப்பில் மாற்றம் - என்.பி.டி.ஏ வரவேற்பு

டி.ஆர்.பி

டி.ஆர்.பி

செய்தி தொலைக்காட்சிகளுக்கான ரேட்டிங் கணக்கிடும் முறையில் புதிய மாற்றம் கொண்டுவருவதை செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் கூட்டமைப்பு(NBDA) வரவேற்றுள்ளது.

    பார்க் அமைப்பில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக என்.பி.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டி.ஆர்.பி ரேட்டிங் பாயிண்டைக் கணக்கிடுவதில் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அமைப்பு ரீதியாக திருத்தம், குறைபாடுகளை ஒப்புக்கொள்ளுதல், மேம்படுத்தலுக்கான தேவை ஆகியவற்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அங்கீகரித்ததை செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் கூட்டல்(NBDA)ஏற்றுக்கொள்கிறது.

    டி.ஆர்.பி ரேட்டிங் பாயிண்டை கணக்கிடும் பார்க் அமைப்பை கூடுதலாக வலுவாக்க மேற்பார்வையிடும் தொழில்நுட்பம், கணக்கிடும் வழிமுறைகள் ஆகியவற்றை மறுசீரமைப்பைக் கொண்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்ததற்கு செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் கூட்டல்(NBDA) பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் செய்தி தொலைக்காட்சிக்கான ரேட்டிங் பாயிண்டை கணக்கிடும் முறையில் உள்ள குறைபாடுகளை ஒப்புக்கொண்டதற்கு என்.பி.டி.ஏ தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக உள்ளது.

    BARC Rating: செய்தி தொலைக்காட்சிகளுக்கான ரேட்டிங்கை இனி வெளியிட மத்திய அரசு அனுமதி



     பார்க் வாரியம் மற்றும் தொழில்நுட்பக் குழுவை மறுசீரமைத்தலும், சுதந்திர உறுப்பினர்களை ஆய்வு செய்ய அனுமதித்ததும், நிலையான மேற்பார்வையிடும் குழுவை அமைத்ததும் இது சரியான பாதையில் செல்வதற்கான வழியாகும். 2020-ம் ஆண்டு மும்பை காவல்துறையால் கண்டறியப்பட்ட டி.ஆர்.பி முறைகேட்டைத் தொடர்ந்து மீண்டும் டி.ஆர்.பி ரேட்டிங் பாயிண்டைக் கணக்கிடத் தொடங்கும்முன் பாயிண்ட்டைக் கண்டறியும் குழுவில் பெரும்மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பார்க் அமைப்பிடம் என்.பி.டி.ஏ கேட்டுக்கொண்டது.


    பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரி சஷி சேகர் வேம்பதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவைக் கவனித்துவருகிறது. அந்த குழுவுடன் இணைந்து செயலாற்றுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் தரவு துல்லியமானதாகவும், சரியான நேரத்திலும் இருப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் என்று என்.பி.டி.ஏ நம்புகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: TRP Rating

    அடுத்த செய்தி