முகப்பு /செய்தி /இந்தியா / NBA அமைப்பின் பெயர், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் என்று மாற்றம்

NBA அமைப்பின் பெயர், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் என்று மாற்றம்

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம்

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம்

டிஜிட்டல் ஊடகத்தின் வருகையின் காரணமாக செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் செய்தி ஒளிபரப்புக்கான மிகப்பெரிய அமைப்பான செய்தி ஒளிப்பரப்பாளர்கள் சங்கம் தற்போது செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள முக்கிய செய்தி தொலைக்காட்சிகள் இந்த செய்தி ஒளிப்பரப்பாளர்கள் சங்கத்தின் கீழ் வருகிறது. இந்த சங்கத்திலுள்ள செய்தி தொலைக்காட்சிகள் இந்தியாவிலுள்ள மொத்த செய்தி தொலைக்காட்சி பார்வையாளர்களில் 80 சதவீத பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஊடகத்துறை மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. பார்வையாளர்கள் பல்வேறு வழிவகைகளின் மூலம் தொலைக்காட்சிகளைப் பார்க்க முடிகிறது. வரும் காலத்தில் டிஜிட்டல் தளம்தான் பிரதானமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் என்.பி.ஏ(NBA) என்று அழைக்கப்படும் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் அதனுடைய பெயரை செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் என்று முடிவு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தெரிவித்த செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைவர் ராஜட் சர்மா, ‘என்.பி.ஏ அமைப்பு அதன் சங்கத்துக்குள் டிஜிட்டல் ஊடகங்களையும் கொண்டுவருவதற்கு முடிவு செய்துள்ளது. அதனால், என்.பி.ஏ அமைப்பு அதன் பெயரை செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்துக்கான வலுவான குரலாக என்.பி.ஏ இருக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Mass Media