Home /News /national /

நிழல் உலக தாதா தாவூத் தொடர்புடைய வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அதிரடி கைது

நிழல் உலக தாதா தாவூத் தொடர்புடைய வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அதிரடி கைது

நவாப் மாலிக்

நவாப் மாலிக்

மகாராஷ்டிர அமைச்சர் நாவப் மாலிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஒருவரின் நற்பெயரை கெடுக்க தாவூத் இப்ராஹிமை பயன்படுத்துவது வசதியான வழி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    மும்மை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்தவர் தாவூத் இப்ராஹிம், சிறிய அளவில் குற்றங்கள் செய்யத் தொடங்கி பின்னர் மும்பையின் நிழல் உலக தாதா என்னும் அந்தஸ்துக்கு தாவூத் உயர்ந்தார். 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் பாகிஸ்தானில் வசிப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தாவூத் இப்ராகிம் மற்றும் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை இயக்குநரகம் (Enforcement Directorate) இன்று அதிரடியாக கைது செய்துள்ளது.

    மாலிக் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், ஹவாலா தொடர்புகள் இருப்பதாக நம்பும் சில நிதி பரிவர்த்தனைகள் இருப்பதாகவும் ED வட்டாரங்கள் CNN-News18 க்கு தெரிவித்தன. தாவூத் இப்ராகிமின் தங்கையான ஹசீனா பார்கரின் நெருங்கிய உதவியாளர் என நம்பப்படும் சலீம் பாட்டீல் என்பவரிடம் மகாராஷ்டிராவின் சிறுபான்மை விவகார அமைச்சர் மாலிக், எல்பிஎஸ் குர்லாவில் ஒரு சொத்தை வாங்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: உபியில் மாறும் காட்சிகள்.. அமித் ஷாவை புகழும் மாயாவதி


    சுமார் 35 முதல் 40 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்கப்பட்டது, அதேசமயம் சொத்தின் உண்மையான விலை 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதேபோல், மாலிக்கிற்கு சொத்தை விற்ற மற்றொரு நபர் சர்தார் ஷாவாலி கான் ஆவார், அவர் 1993 இல் மும்பை தொடர் குண்டுவெடிப்பை நிறைவேற்றுவதில் மேமனுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட சிவில் ஒப்பந்ததாரர் ஆவார்.

    மேலும் படிக்க: பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைத்த இம்ரான் கான்... சசிதரூர் கிண்டல்


    நாவப் மாலிக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த என்சிபி தலைவர் சரத் பவார்,  ஒருவரின் நற்பெயரை கெடுக்க தாவூத்தை பயன்படுத்துவது வசதியான வழியாகும் என்றார். "அவருக்கு எதிரான வழக்கு பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தாவூத்தின் பெயர் எப்போதும்  எதிரிகளை இழிவுபடுத்த முயற்சிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார். தான் முதலமைச்சராக இருந்தபோது, தனக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதாகவும் 25 ஆண்டுகள் கழித்து அதே தந்திரம் பயன்படுத்தப்படுள்ளதாகவும் சரத் பவார் கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Arrest, Enforcement Directorate, Maharashtra

    அடுத்த செய்தி