ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ.8 கோடி மதிப்புள்ள பணம், தங்கத்தால் ஜொலித்த ஆந்திரா அம்மன் - வைரலாகும் நவராத்திரி புகைப்படங்கள்.!

ரூ.8 கோடி மதிப்புள்ள பணம், தங்கத்தால் ஜொலித்த ஆந்திரா அம்மன் - வைரலாகும் நவராத்திரி புகைப்படங்கள்.!

வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவில்

வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவில்

Navaratri 2022 | நவராத்திரி விழாவிற்காக ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவிலில் கோடிக்கணக்கானப் பணத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

கோவில் திருவிழாக்கள், பண்டிகை நாள்கள் என்றாலே கோவில்களில் வண்ணமயமான அலங்காரங்கள் களைக்கட்டியிருக்கும். விதவிதமான மலர்கள், காய்கறிகள், பழங்கள் என கோவில் வாசல் தொடங்கி கோவில் பிரகாரம் முழுவதும் அலங்காரங்களுக்குப் பஞ்சமே இருக்காது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமையக்கூடும். இப்படி விதவிதமான அலங்காரங்களைப் பார்த்து பழகிய நமக்கு தற்போது இணையத்தில் வைரலான புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன அற்புதம் இருந்தது தெரியுமா?

தற்போது இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை விமர்சியாக நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவிலில் கோடிக்கணக்கானப் பணத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியுள்ளது.

சுமார் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவி அம்மனுக்கு கரன்சி நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இக்கோவிலின் வழக்கமான கட்டிடக்கலை சுவாரஸ்யமாக இருந்தாலும், நவராத்திரி விழாக்களில் கண்களைக் கவரும் உண்மையான அம்சம் அதன் அலங்காரமாகும். இந்தாண்டு நவராத்திரியை முன்னிட்டு 8 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க ஆபரணங்களால் அம்மனுக்கு நிர்வாகிகள் அலங்காரம் செய்துள்ளனர்.

இந்த அலங்காரம் அனைத்தும் நேர்த்திக்கடனுக்காக செய்யப்படுகிறது எனவும், அம்மன் மட்டுமில்லை கோயில் முழுவதும் கரன்சி நோட்டுகள் மூட்டை மூட்டைகளாகக் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது எனவும், ஆரம்பத்தில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பணங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணம் மற்றும் தங்கம் மக்களுடையது என்றும், பூஜைக்குப் பிறகு அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்றும், கோயில் அறக்கட்டளைக்கு எடுத்துச் செல்ல மாட்டோம் என்றும் கோயில் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

Also Read : இந்தியாவில் ஆவிகள் நடமாட்டம் நிறைந்த ஐந்து சாலைகள்! சென்னையிலும் இருக்காம்..

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : படத்தில் முதலில் தெரிவது எது.? உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!

ஆந்திரா வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவிலின் சிறப்பு:

ஆந்திர மக்களில் வைஸ்ய குல பிரிவினரின் குலதெய்வமாகவே போற்றப்படும் ஸ்ரீவாசவி அம்மன் மக்களின் நலன்களுக்காக தனது இன்னுயிரை தீயில் மாய்த்துக் கொண்டாராம். இதனையடுத்து பெனுகொண்டா மக்கள், வாசவி அன்னையின் ஆணைப்படி பிரம்மாண்ட கோவிலைக் கட்டியதோடு சிறப்பான வழிபாடுகளையும் மேற்கொண்டுவருகின்றனர். சக்தி பெண்ணின் அவதாரமாக பூலோகத்தில் அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது. சுமார் 135 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள வாசவி தேவி அம்மனை வழிபட்டு வந்தால், தென்னாட்டில் நிலவி வந்த பஞ்சமும், கொடிய நோய்களும் முடிவுக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

Published by:Selvi M
First published:

Tags: Andhra Pradesh, Navaratri, Trending