• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா - காங்கிரஸில் தொடரும் குழப்பம்..

நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா - காங்கிரஸில் தொடரும் குழப்பம்..

நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

இரண்டரை மாதங்களுக்கு முன்னர் தான் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார்.

  • Share this:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை திடீரென நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்குள் நீயா நானா போட்டி ஏற்பட்டு, அதன் மூலம் முதல்வர் மாற்றம் வரை சென்றது. பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே சில ஆண்டுகளாகவே பிரச்னை இருந்து வந்தது.

இருவரும் எலியும், பூனையாக சண்டை போட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் கேப்டன் அமரீந்தர் சிங். அவருடைய ராஜினாமாவுக்கு பின்னணியில் நவ்ஜோத் சிங் ஏற்படுத்திய அரசியல் அழுத்தம் காரணமாக சொல்லப்பட்டது. அதன் பின்னர், எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டிய அகில இந்திய காங்கிரஸ் தலைமை, சரஞ்ஜித் சிங் சன்னியை பஞ்சாப் மாநில முதல்வராக தேர்ந்தெடுத்தது.

முதல்வர் பதவியிலிருந்து விலகிய கேப்டன் அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து குறித்தும், காங்கிரஸ் தலைமை மீதுமான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியில் தான் அவமானத்தை சந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலக அஸ்வின் காரணமா? – என்ன பிரச்னை?

இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. ஜூலை 18ம் தேதி சராசரியாக இரண்டரை மாதங்களுக்கு முன்னர் தான் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார். குறுகிய காலத்திற்குள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும், கேப்டன் அமரிந்தர் சிங்கை பதவியிலிருந்து நீங்கச் செய்வது மட்டுமே சித்துவின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.



ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியிருக்கும் சித்து, காங்கிரஸில் தொடருவேன் என கூறியிருக்கிறார்.

Also Read:  பவானிபூர் இடைத்தேர்தல் செலவை யார் ஏற்பார்கள்? – கொல்கதா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

2022-ல் பஞ்சாப் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கேப்டன் அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்துவின் விலகல்கள், எதிர்வரும் தேர்தலில் அக்கட்சியின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. காங்கிரஸ் தலைமை மீது கேப்டன் அமரிந்தர் சிங் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் அவரை பாஜக தன் பக்கமாக வளைத்துப்போட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: