• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக தொடரும் ராஜினாமாக்கள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை!

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக தொடரும் ராஜினாமாக்கள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை!

Congress

Congress

பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் ரஸியா சுல்தானா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

  • Share this:
பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்த சிறிது நேரத்தில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பெண் அமைச்சர் மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பதிலாக தலித் பிரிவைச் சேர்ந்தவரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வானார். அவரின் தலைமையில் 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த ஞாயிறன்று பதவியேற்றது.

இந்நிலையில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களில் சிலர் மீதான அதிருப்தியால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இதனிடையே சித்துவுக்கு ஆதரவாக பஞ்சாப் பெண் அமைச்சர் ரஸியா சுல்தானா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதலமைச்சருக்கு ரஸியா சுல்தானா அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் சித்துவுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

Navjot singh sidhu


நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அச்சிடுதல் மற்றும் எழுதுபொருள் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தவர் ரஸியா சுல்தானா. பதவியேற்ற இரண்டு நாட்களுக்குள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பஞ்சாப் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் அமைச்சரும் இவர் தான்.

Also Read: நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமாவின் பின்னணி இது தானா?

ரஸியா, தனது ஐபிஎஸ் கணவருக்கு டிஜிபி பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மனக்கசப்பில் இருந்து வந்தார்.

ரஸியாவைத் தொடர்ந்து சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை குல்சார் இந்தர் சாஹல் ராஜினாமா செய்துள்ளார்.

Also Read:   நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திடீர் ராஜினாமா – காங்கிரஸில் தொடரும் குழப்பம்..

மேலும் சித்துவுக்கு ஆதரவாக பொதுச் செயலாளர் பதவியை யோகிந்தர் டிங்ராவும் ராஜினாமா செய்துள்ளார். சித்து ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்த பிரமுகர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியளித்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் சித்து மாநில தலைவராக்கப்பட்ட நிலையில், இரண்டரை மாதங்களுக்குள் அவர் ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: