மின்வெட்டு பிரச்னையில் தனது சொந்த அரசாங்கத்தையே கேள்விகளால் துளைத்தெடுத்து வரும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, கடந்த 8 மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்ததும், 8 லட்ச ரூபாய்க்கும் மேல் கட்டண பாக்கி வைத்திருப்பதும் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் முன்னாள் அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து, மின்வெட்டு பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். மின்வெட்டு பிரச்னையில் முதல்வரை விமர்சித்து பேசிய சித்து, முதல்வர் சரியாக செயல்பட்டு வந்தால் அலுவலக நேரங்களை முறைப்படுத்துவது, வீட்டில் இருப்போர் ஏசி பயன்பாட்டினை குறைக்க கூறுவதற்கு அவசியம் இருக்கது என்பது போல அறிவுரை கூறினார்.
இந்த நிலையில் மின்வெட்டு பிரச்னையில் மாநில அரசு மீது குறைகூறும் சித்து, சுமார் 9 லட்ச ரூபாய் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிலுவை வைத்திருப்பதும், கடந்த 8 மாதங்களாக அவர் மின்கட்டணம் செலுத்தாததும் தெரியவந்திருக்கிறது.
Also Read:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை?: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!
கடந்த ஆண்டு 17 லட்ச ரூபாயை மின்கட்டண பாக்கியாக சித்து வைத்திருந்ததாகவும் பின்னர் கடந்த மார்ச்சில் 10 லட்ச ரூபாயையும் செலுத்தியிருப்பதாகவும், தற்போது மேலும் 8.67 லட்சம் அளவுக்கு சித்து மின்கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சித்துவின் மின்கட்டண நிலுவைத் தொகையை காட்டும் பில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஊருக்கு தான் உபதேசமா? உங்களுக்கில்லையா என கடுமையாக பேசி வருகிறார்கள்.
சித்து - அமரீந்தர் சிங் மோதல்:
2017ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே உரசல் ஏற்பட்டது, பொதுவெளிகளில் தொடர்ந்து முதல்வர் குறித்தும் அரசின் செயல்பாடு குறித்தும் சித்து விமர்சித்து வந்தார். மோதல் அதிகமானதையடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து.
Also Read:
உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் நள்ளிரவில் திடீர் ராஜினாமா: பதவியேற்ற 4 மாதங்களுக்குள் விலகல் ஏன்?
இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சிக்குள் வலுவான சக்தியாக திகழ வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சித்து, தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார். இதே கோரிக்கையுடன் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை டெல்லியில் சென்று சந்தித்த சித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதே போல, சீனியர்கள் இருக்கும் போது புதியவரான சித்துவுக்கு பதவி தரக்கூடாது என முதல்வர் அமரீந்தரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.