• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நவ்ஜோத் சிங் சித்துவின் திடீர் யூ-டர்ன்.. ராஜினாமா முடிவை கைவிடுகிறார்!

நவ்ஜோத் சிங் சித்துவின் திடீர் யூ-டர்ன்.. ராஜினாமா முடிவை கைவிடுகிறார்!

Navjot singh sidhu

Navjot singh sidhu

அதிருப்தியில் இருந்த சித்துவை காங்கிரஸ் தலைமை சமரசம் செய்ய முயற்சி செய்தது.

  • Share this:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென பின் வாங்கியிருக்கிறார்.

கிரிக்கெட்டர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சிங் சித்து. 2004ம் ஆண்டு பாஜகவில் இணைந்த சித்து அம்ரிட்சர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பியாக இருந்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பியாக இருந்த போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்ததில் இருந்தே அப்போதைய முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்குடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இருவருக்குமிடையேயான உரசல் காரணமாக ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியில் இருந்து சித்து விலகினார்.

கேப்டன் அமரிந்தர் சிங்கின் ஆட்சேபத்துக்கு இடையே சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக்கியது காங்கிரஸ் தலைமை. அதே நேரத்தில் அமரிந்தரை எதிர்த்து அரசியல் செய்து காய் நகர்த்தி வந்தார். இதன் காரணமாக அமரிந்தர் சிங்கிற்கு கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Also Read:  விவசாயிகள் போராட்ட களத்தில் சிதைக்கப்பட்ட உடல்.. கொடூரமான கொலை.. வைரல் வீடியோ

இதனிடையே புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி தேர்வானர். பின்னர் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தால் மாநில தலைவர் சித்து அதிருப்தி அடைந்தார். மேலும் அமைச்சரவையில் இடம்பிடித்திருப்பவர்களில் சிலர் மீது ஊழல் முறைகேடு புகார் இருப்பதால் சித்து அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்து அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, அதிருப்தியில் இருந்த சித்துவை காங்கிரஸ் தலைமை சமரசம் செய்ய முயற்சி செய்தது. இதன் ஒரு முயற்சியாக நேற்று சித்துவை டெல்லிக்கு வரவழைத்து ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக தன்னுடைய ராஜினாமா முடிவை சித்து கைவிட்டிருக்கிறார். தான் காங்கிரஸ் தலைவராக தொடர்வேன் எனவும் எனக்கு இருந்த சிக்கல்கள் முற்றிலும் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் சித்து தெரிவித்திருக்கிறார்.

Also Read:   பயங்கர வேகத்தில் பக்தர்கள் மீது மோதிய கார்.. அதிர்ச்சி வீடியோ..

இதே போல முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி, அவருடைய மகன் திருமணத்தை தொடர்ந்து தன்னுடைய குடும்பத்துடன் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கை அவருடைய பண்ணை வீட்டில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸின் அனைத்து பிரிவினரையும் அவர் சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: