ஹோம் /நியூஸ் /இந்தியா /

29-ம் தேதி 5-வது முறையாக முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக்!

29-ம் தேதி 5-வது முறையாக முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக்!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

146 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

146 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பிஜு ஜனதா தள சட்டமன்ற குழு தலைவராக நவீன் பட்நாயக் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் 5-வது முறையாக முதலமைச்சர் அரியணையில் ஏறும் நவீன் பட்நாயக், ஒடிசா ஆளுநர் கணேஷி லாலை சந்தித்து 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, வரும் 29-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

மேலும் பார்க்க:

Published by:Tamilarasu J
First published:

Tags: Naveen Patnaik