ஒடிசாவின் முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்

2000-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒடிசாவின் முதலமைச்சராக உள்ள நவீன் பட்நாயக், தற்போது 5-வது முறையாக முதல்வராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவின் முதல்வராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்
  • News18
  • Last Updated: May 29, 2019, 1:09 PM IST
  • Share this:
ஒடிசா முதலமைச்சராக தொடர்ந்து 5-வது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றார். அவருடன் 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 146 தொகுதிகளில் 112 இடங்களை ஆளும் பிஜு ஜனதாதளம் கட்சி கைப்பற்றியது. பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றிபெற்றன.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக பிஜு ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். புவனேஷ்வரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற விழாவில், நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


அவருடன் 11 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களில் இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் புதுமுகங்கள். பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினரும் கலந்துகொண்டனர்.கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலமைச்சராக உள்ள நவீன் பட்நாயக், தற்போது 5-வது முறையாக முதல்வராகியுள்ளார். மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என்றும், ஒடிசாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Also see... வைகோ ராசி எப்புடி? மதிமுகவினர் பேனர்கள் அப்புடி!

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading