மாவோயிஸ்ட் பாதிப்பு பகுதிகளில் இலவச ஸ்மார்ட்ஃபோன்.. ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..

மாவோயிஸ்ட் பாதிப்பு பகுதிகளில் இலவச ஸ்மார்ட்ஃபோன் வழங்கப்படவுள்ளதாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட் பாதிப்பு பகுதிகளில் இலவச ஸ்மார்ட்ஃபோன்.. ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு..
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக்
  • Share this:
ஒடிஷாவில் மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச ஸ்மார்ட்ஃபோன் வழங்கப்படும் என ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள மல்கன்கிரி மாவட்டத்தின் ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியில் வசிக்கும் மக்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக கலந்துரையாடிய நவீன் பட்நாயக், இலவச ஸ்மார்ட்ஃபோன் திட்டத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ஸ்வாபிமான் அஞ்சல் பகுதி மக்களை மற்ற பகுதிகளோடு இணைக்க உதவும் என்றும், பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் ஆன்லைனில் கல்வி கற்க உதவியாக அமையும் என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.அந்தப் பகுதியில் ஏற்கனவே நான்கு செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பட்நாயக், 4ஜி வசதியுடனான மேலும் மூன்று டவர்களை நிறுவும் பணிகள் நடைபெற்றுவதாக தெரிவித்தார். அந்தப் பகுதியை முன்னேற்றும் நோக்கில் கடந்த 2018 ஜூலை மாதம் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்தத் தொகை 215 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
First published: November 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading