• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா!

முதல் மாநிலமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்தது ஒடிசா!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

"கல்வி நிறுவனங்கள் ஜூன் 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது"

  • Share this:
    ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

    நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஏப்ரல் 14 வரை இது முடிவடைய உள்ள நிலையில் பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரி வருகின்றன.

    இந்நிலையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அம்மாநிலத்துக்கான ஊரடங்கை எதிர்வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். அங்குள்ள கல்வி நிறுவனங்கள் ஜூன் 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலங்களும் இதுவரை இப்படியொரு அறிவிப்பை வெளியிடாத சூழலில், முதன்முதலாக ஊரடங்கை நீட்டித்திருக்கிறது ஒடிசா. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்கள் இப்படியான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: