• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நாடு முழுவதும் நவராத்திரி விழா உற்சாக தொடக்கம்- முதலமைச்சர்கள் கோயில் சென்று வழிபாடு

நாடு முழுவதும் நவராத்திரி விழா உற்சாக தொடக்கம்- முதலமைச்சர்கள் கோயில் சென்று வழிபாடு

Youtube Video

நாடு முழுவதும் நவராத்திரி விழா உற்சாகமாக தொடங்கியுள்ளது.

  • Share this:
    9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை, உற்சாகமாக தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள ஜந்தேவலன் கோயிலில், அம்மன் சிலைக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பே கவுரி ஆரத்தி எனும் சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் குறைவாகவே அங்கு அனுமதிக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள காளி மந்திர் ஆலயத்தில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் வந்திருந்த பலரும், அம்மனுக்கு பட்டாடைகள் மற்றும் மலர் மாலைகளை வழங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    கர்நாடகாவின் மைசூருவில் புகழ்பெற்ற தசரா திருவிழாவை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் தொடங்கிவைத்தனர். அதனைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி கோயிலில் அவர்கள் தரிசனம் செய்தனர்.

    நவராத்தியை தொடங்குவதை ஒட்டி ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் உள்ள கோயில்கள் பல டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்று கொண்டு வருபவர்கள் மட்டுமே கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மும்பா தேவி கோயிலில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சிறப்பு வழிபாடு நடத்தினார்.  மும்பையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு, துணை முதலமைச்சர் அஜித் பவார் அதிகாலையிலேயே வந்து வழிபாட்டில் ஈடுபட்டார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த கோயிலில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்கர்தகள் மட்டுமே, வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனிடையே, நவராத்திரியை ஒட்டி நடைபெறும் கர்பா நிகழ்ச்சிக்காக, குஜ்ராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெண்கள் பலரும் நடன பயிற்சியில் ஈடுபட்டனர். உற்சாகமூட்டும் பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி விழா கொண்டாட்டத்திற்காக, பெண்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: