Home /News /national /

திருப்பதியில் கருடவாகன சேவை தரிசனம்: 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதியில் கருடவாகன சேவை தரிசனம்: 4 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை

திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று முக்கிய வாகன சேவையான கருட சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி பிரமோற்சவ கருடசேவையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் கடந்த 10-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை மோகினி அலங்கார சேவை கோவில் மாடவீதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து பிரமோற்சவ நிகழ்ச்சியில் முக்கிய வாகன சேவையான கருட சேவை இரவு 7 மணிக்கு தொடங்கியது.

    இதனையொட்டி ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி, லக்ஷ்மி ஹாரம், மகர கண்டி உள்ளிட்ட சிறப்பு திருவாபரணங்களை பூண்டு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். மாடவீதிகளில் கூடியிருந்த 2 லட்சம் பக்தர்களுக்கு மலையப்பப சாமி காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா என்ற முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் மாடவீதியில் புறப்பாடு நடத்தப்பட்டது.

    திருப்பதி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை


    மாடவீதிகளில் வெளியே குவிந்திருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்காக முக்கிய இடங்களில் மெகா திரைகள் பொருத்தப்பட்டு, அவற்றின் மூலம் கருட சேவை நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. கருடசேவையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில், நிமிடத்திற்கு ஒன்று என்ற கணக்கில் ஆந்திர மாநில போக்குவரத்துக்கழகம் சார்பில் திருமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    ALSO WATCH....
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: 4lakh devotees, Garuda Seva, Navaratri Brahmotsavam festivities, Tirumala

    அடுத்த செய்தி