திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்.. வீதி உலா நிகழ்வு ரத்து..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை கோவில் வளாகத்திற்குள் வைத்து நடத்த திட்டமிட்டிருப்பதாக முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்.. வீதி உலா நிகழ்வு ரத்து..
திருப்பதி- கோப்புப் படம்
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்றிரவு நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்குகிறது. கடந்த மாதம் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி, வளாகத்திற்குள்ளேயே எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் 24-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு, நவராத்திரி பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான, அங்குரார்ப்பணம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, முளைப்பாரியிடலும், ஏழுமலையானின் படை தளபதியான சேனாதிபதி விஷ்வகேசவலுவின் தர்பார் மற்றும் எழுந்தருளலும் நடந்தன.

மேலும் படிக்க...காதல் மனைவியை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. நடந்தது என்ன? (வீடியோ)


கொரோனா அச்சம் காரணமாக நவராத்திரி பிரமோற்சவ நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வீதி உலா நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்  4 மாட வீதிகளை ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி கோவில் வளாகத்திற்குள் வைத்து பிரம்மோற்சவத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக முதன்மை செயல் அலுவலர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading