Home /News /national /

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது ஒரு கிராமத்தை இயற்கை விவசாயத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். : பிரதமர் மோடி

  • Last Updated :
    இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது- புதிய தேவைகள் மற்றும் புதிய சவால்களின் பயணத்திற்கு ஏற்றபடி விவசாய முறையைப் பின்பற்ற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விதையிலிருந்து வேளாண் சந்தை வரை கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    மண் பரிசோதனை முதல் நூற்றுக்கணக்கான புதிய விதைகள் வரை, பிரதமரின் கிசான் சம்மான் நிதி முதல் வேளாண் உற்பத்தி செலவில், 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தது வரை, நீர்ப்பாசனம் முதல் கிசான் ரயில் வரை வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இறக்குமதி உரங்களின் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது விவசாயிகளின் செலவை அதிகரிப்பதோடு சுகாதாரத்தையும் பாதிக்கவும் வழி வகுக்கும். வேளாண்மை தொடர்பான பிரச்சினைகள் மோசமாவதற்கு முன்பாக நாம் நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்.

    இதையும் படிங்க : இந்தியா- பாகிஸ்தான் 1971 போர்...மறைக்கப்படும் இந்திரா காந்தி புகழ்: ராகுல், பிரியங்கா வேதனை

    இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது ஒரு கிராமத்தை இயற்கை விவசாயத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    பழங்கால வேளாண் அறிவை நாம் மீண்டும் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். நிலத்தில் வைக்கோலை தீயிட்டு எரிப்பதால் அதன் விளைச்சல் திறன் பாதிக்கும் என நிபுணர்கள் கூறியும் வைக்கோல் எரிப்புப் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. புதிய விஷயங்களை கற்பதோடு நமது விவசாயத்தை அழிக்கும் தவறான நடைமுறைகளை நாம் தவிர்க்க வேண்டும்.
    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இதையும் படிங்க : புகைப் பிடித்ததற்கு அபராதம்: பழிவாங்க ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

    இதையும் படிங்க : POCSO Case | போக்சோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு: நீதிபதி புஷ்பா கனேடிவாலாவுக்கு பின்னடைவு
    Published by:Musthak
    First published:

    Tags: Modi

    அடுத்த செய்தி