Home /News /national /

இன்று தேசிய இளைஞர் தினம்- இதன் முக்கித்துவம், வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

இன்று தேசிய இளைஞர் தினம்- இதன் முக்கித்துவம், வரலாறு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

விவேகானந்தர்

விவேகானந்தர்

National Youth Day : இந்த தேசிய இளைஞர் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், இந்த 2022 ஆம் ஆண்டின் நோக்கம் பற்றியும் விரிவாக இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு நாடு வளமாக உள்ளது என்பதை அந்நாட்டில் உள்ள இயற்கையான வளங்களையும், அதன் மூலம் ஏற்படும் வளர்ச்சியையும் கொண்டு கணிக்கப்படுகிறது. அதே போன்று ஒரு நாட்டில் அதிக அளவில் இளைஞர்கள் இருந்தாலும் அதை வளமான நாடு என்று கருதுவோம். இதற்கு காரணம், இளைஞர்களை அதிகம் கொண்ட நாடுகளின் வளர்ச்சியானது பல மடங்கு உயரும்; இதனால் அந்நாட்டின் வளமும் சேர்ந்தே உயரும். எனவே ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை என்பது மிக அவசியமானது. இதை கருத்தில் கொண்டு தான் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு பல்வேறு நற்கருத்துக்களை கூறியுள்ளார்.

இவரின் சேவைகளையும், இந்திய நாட்டிற்கு இவர் வழங்கிய சிறந்த பாதையின் தன்மையை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்தநாளை 'தேசிய இளைஞர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தர் எப்போதும் நாட்டின் இளைஞர்களை ஊக்குவிக்கும் படியாகவும், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் சரியான பயன்பாட்டைப் பற்றியும் பேசி வந்தார். இந்த தேசிய இளைஞர் தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், இந்த 2022 ஆம் ஆண்டின் நோக்கம் பற்றியும் விரிவாக இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேசிய இளைஞர் தினம் 2022 இந்தியாவில் தேசிய இளைஞர் தினமானது சுவாமி விவேகானந்தரை நினைவு கூற கொண்டாடப்படுகிறது. இவரின் பேச்சுகள் மற்றும் பொன் மொழிகளை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த நாளில் இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன்மூலம் விவேகானந்தரின் சிந்தனையை இன்றைய இளைஞர்களுக்கு கடத்தி, சிறந்த பாதையில் அவர்களை வழிகாட்ட முடியும்.

ALSO READ |  மனத்தூய்மையுடன் இருங்கள்... ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் - சுவாமி விவேகானந்தர்

விவேகானந்தரின் சிந்தனைகள் : இவர் ஜனவரி 12 ஆம் தேதி 1863-இல் பிறந்தார். அந்த கால கட்டத்தில் இந்திய நாடு வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்துள்ளது. மேலும் இந்தியா சுதந்திரம் பெறவில்லை. எனவே இளைஞர்களின் பங்கு நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இளைஞர் நாட்டின் எதிர்காலமாக கருதப்படுகின்றவர்கள். இளம் வயதிலேயே இளைஞர்களின் அடிப்படை சிறப்பாக இருந்தால், அது எதிர்காலத்தில் முழு நாட்டையும் பயனளிக்கும் என்கிற சிந்தனையை விதைத்தார். இதன் மூலம் இந்திய நாட்டிற்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உயர்த்தி காட்டினார்.



தேசிய இளைஞர் தினத்தின் முக்கியத்துவம்
சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் தற்போதைய காலத்திலும் பயனுள்ளவையாக உள்ளது. இளைஞர்கள் தங்கள் திறமைகளை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் என்பதை அவர் விளக்கி உள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர்களுக்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராட இளைஞர்களை தன் பேச்சின் மூலம் தூண்டினார்.

ALSO READ |  விவேகானந்தர் சிந்தனைகள், வள்ளலார் போதனைகள்... மரம் நடுதலில் மனதிருப்தி -நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவுகள் ஒரு பார்வை!

இவரின் பல்வேறு சிந்தனை துளிகளால் "இந்திய தேசத்தின் துறவி" என்று அழைக்கப்பட்டார். 'ஒருவர் தான் என்னவாக ஆக வேண்டும், எதை அடைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை அடைய முடியும், எல்லா சக்தியும் நம் கைகளில் தான் உள்ளது' என்று அடிக்கடி இளைஞர்களுக்கு கூறுவார். இவரின் சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருப்பதால், இவரின் பிறந்த நாளில் தேசிய இளைஞர் தினத்தை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

2022 - நோக்கம் :  ஒவ்வொரு ஆண்டும் தேசிய இளைஞர் தினம் வெவ்வேறு கருப்பொருள்களை கொண்டு அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த 2022 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினத்தின் கருப்பொருள் 'யுவாஹ் - உட்சா நயே பாரத் கா' என்பதாகும். அதாவது 'இளைஞர்களின் உற்சாகமான புதிய இந்தியா' என்று பொருளாகும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: National Youth Day, Swami Vivekananda

அடுத்த செய்தி