Home /News /national /

தேசிய எளிமை தினம்: இந்த நாள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் யார்? வரலாறு என்ன?

தேசிய எளிமை தினம்: இந்த நாள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் யார்? வரலாறு என்ன?


தேசிய எளிமை தினம்

தேசிய எளிமை தினம்

தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12ம் தேதி தேசிய எளிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்க்கை அடிப்படைக்கு தேவையான அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் ஒரு தருணத்தை இந்த நாள் குறிக்கிறது. குறிப்பாக இந்த தினம் ஹென்றி டேவிட் தோரூ என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு உலகளவில் கொண்டாடப்படுகிறது.

அவர் தனது வாழ்நாளை எளிய வாழ்க்கை கொள்கைகளால் வழிநடத்தினார். பரபரப்பான வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விலகி இயற்கையான சூழலில் தோரூ ஒரு எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். அவரது நினைவாகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஹென்றி டேவிட் தோரே 1817ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள கான்கார்ட்டில் பிறந்தார். இவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், தத்துவவாதி, இயற்கைவாதி, கவிஞர், வரலாற்றாசிரியர், சர்வேயர் மற்றும் ஒரு ஆழ்நிலை நிபுணர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவர் தனது தலைசிறந்த படைப்பான ‘வால்டன்’ புத்தகத்திற்கு பெயர் பெற்றவர். இவர் 1845 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு புகழ்பெற்ற வால்டன் குளத்தில் தங்கியதன் விளைவாக உருவானது.

ALSO READ |  தடுப்பூசி முகாமுக்காக உயிரை பணயம் வைத்த சுகாதாரப் பணியாளர்கள் - மனித நேய முயற்சிக்கு ராயல் சல்யூட்!

நவீன வாழ்க்கையின் தொழில்நுட்பங்கள் மற்றும் கணினிகளின் தேவை இல்லாமல் மனிதர்கள் வனாந்தரத்தில் அதாவது இயற்கையோடு தனியாக இருக்க முடியும் என்ற ஆசிரியரின் பரிசோதனையை நிரூபிக்க, வாழ்க்கையின் சலசலப்புகளிலிருந்து விலகி அவர் காடுகளில் தனிமையில் தங்கியிருந்த அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டார்.இதையடுத்து, அவரது பிறந்தநாளையொட்டி அவரது எளிமையான வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் தேசிய எளிமை நாள் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. அதுவே நாளடைவில் உலகளவில் பல இடங்களில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ |  குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய 3 லட்ச ரூபாய் செலவு செய்த மைசூர் காவல்துறை அதிகாரி

தேசிய எளிமை நாள்: வரலாறும் முக்கியத்துவமும்

எளிமையான வாழ்க்கையை வாழ ஊக்குவித்த ஹென்றி டேவிட் தோரூவின் படைப்புகளை தேசிய எளிமை நாள் அங்கீகரிக்கிறது மற்றும் அது வாழ்க்கையின் சிக்கல்களைத் தவிர்த்து விடுகிறது. வாழ்வில் ஒவ்வொருவரும் சந்திக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், அதனை குறைக்கவும், வாழ்க்கைமுறையை எளிமையாக்கவும், மேலும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் குறிக்கும் நோக்கில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. மேலும் அதிக நேரத்தை நமக்கு நாமே ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இதனால் நாம் நம்மோடு மிகச் சிறந்த முறையில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த தினம் பிரதிபலிக்கிறது.

ALSO READ |  பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்ற மகளின் கைகளை பொசுக்கிய சைக்கோ தாய்.. ஆத்திரத்தில் வெறிச்செயல்!

தோரூ தனது புத்தகமான ‘வால்டன்’-ல் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவென்றால், “எளிமை, எளிமை, எளிமை! என்று நான் சொல்கிறேன். உங்கள் விவகாரங்கள் இரண்டு அல்லது மூன்று ஆக இருக்கட்டும். நூறு அல்லது ஆயிரம் அல்ல; ஒரு மில்லியன் அல்லது அரை டஜன் எண்ணிக்கையில் கூட இருக்கட்டும். உங்கள் கணக்குகளை உங்கள் கட்டைவிரல் ஆணியில் வைக்கவும். ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதேபோல மற்றொரு மேற்கோளில், வால்டனின் ஆசிரியர் கூறியதாவது, "நீங்கள் உங்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்திக்கொள்ளும் போது, ​​பிரபஞ்சத்தின் விதிகள் உங்களுக்கு எளிமையாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ |  விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்!

ஹென்றி டேவிட் தோரேவின் பிறந்தநாளில், அவரது வார்த்தைகளில் மட்டுமே வாழ்க்கையை நாம் பரிந்துரைக்கிறோம். தேவையற்ற மன அழுத்தத்துடன் உங்கள் வாழ்க்கையை சிக்கலாக்காதீர்கள். எளிமையான, திருப்தியான, மகிழ்ச்சியான மற்றும் ஒரு நோக்கத்திற்காக வாழ வேண்டும்.

வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொண்டு, மீதமுள்ளவற்றிலிருந்து விடுபட வேண்டும். கடைசியாக, மனக்கிளர்ச்சி மற்றும் தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதில் இருந்து உங்களை தடுத்து நிறுத்துவது மிக அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 
Published by:Sankaravadivoo G
First published:

அடுத்த செய்தி