• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் அறியப்படாத நன்கொடை நிதிவரத்து எவ்வளவு?- ஏடிஆர் வெளியீடு

பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சிகளின் அறியப்படாத நன்கொடை நிதிவரத்து எவ்வளவு?- ஏடிஆர் வெளியீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆதாரங்கள் எதுவென்று தெரியாமல் அதாவது நிதிமூலம் எதுவென்று தெரியாமல் தேசியக் கட்சிகளுக்கு நன்கொடை நிதி வரத்து நிகழ்ந்துள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்)தகவல் தெரிவி்த்துள்ளது.

  • Share this:
    ஆதாரங்கள் எதுவென்று தெரியாமல் அதாவது நிதிமூலம் எதுவென்று தெரியாமல் தேசியக் கட்சிகளுக்கு நன்கொடை நிதி வரத்து நிகழ்ந்துள்ளதாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்)தகவல் தெரிவி்த்துள்ளது.

    கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் ரூ.3ஆயிரத்து 377.41 கோடி நிதியை தேசியக் கட்சிகள் பெற்றுள்ளன. தேசிய கட்சிகள் பெற்ற நிதியில் 70 சதவீதம் எங்கிருந்து வந்தது என்ற நிதிமூலம் அறியப்படாத வகையில் வந்துள்ளது.

    ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது என்பது ஒரு தமிழ் பழமொழி அதனுடன் இப்போது நிதிமூலமும் பார்க்கக் கூடாது.

    இது தொடர்பாக ஜனநாயகத்துக்கான சீர்த்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கடந்த 2019-20ம் நிதியாண்டில் தேசியக் கட்சிகள் சார்பில் திரட்டப்பட்ட நிதியில் ரூ3,370 கோடி அறியப்படாத, ஆதாரங்கள் இல்லாத வகையில் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியில் 88.63 சதவீதம் அதாவது ரூ.2,993.82 கோடி நிதி தேர்தல்நிதிப் பத்திரங்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது. தேசியக் கட்சிகள் பெற்ற நிதியில் 70 சதவீதம் அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது.

    இதில் பாஜக மட்டும் ரூ.2,642.63 நிதி அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாகப் பெற்றுள்ளது. அதாவது, தேசியக் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த அறியப்படாத நிதியில்(ரூ.3,377கோடி) 78.24 சதவீதம் பாஜக சார்பில் பெறப்பட்டுள்ளது.

    தேசியக் கட்சிகளான காங்கிரஸ், என்சிபி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளி்ல் அதிகபட்ச நிதியைப் பெற்றது பாஜக மட்டும்தான்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.526 கோடி அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாக அதாவது 15.57 சதவீதம் பெற்றுள்ளது. கடந்த 2004-05 முதல் 2019-20ம் ஆண்டுவரை தேசியக் கட்சிகள் சார்பில் ரூ.14ஆயிரத்து 651.53 கோடி அறியப்படாத ஆதாரங்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

    2004 முதல் 2019ம் ஆண்டுவரை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து சேல்ஆஃப் கூப்பன் என்ற அடிப்படையில் ரூ.4,096 கோடி வருமானம் பெற்றுள்ளன.

    அறியப்படாத வகையில் பெறும் நன்கொடை என்பது ரூ.20,000த்திற்கும் கீழ் உள்ள நன்கொடைகளாகும். தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் வழங்கப்படும் நன்கொடைகளின் அடையாளங்களும் வெளியிடப்பட மாட்டாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: