கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது தேசிய மருத்துவ ஆணைய மசோதா!

மருத்துவ கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தாக்கல் செய்தார்.

news18
Updated: July 29, 2019, 11:08 PM IST
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது தேசிய மருத்துவ ஆணைய மசோதா!
நாடாளுமன்றம்
news18
Updated: July 29, 2019, 11:08 PM IST
தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறியது.

மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் என்.ஐ.ஏ, உபா போன்ற முக்கிய மசோதாக்களை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது.

அந்த வரிசையில், இன்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவ கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளும் வகையிலான தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மக்களவையில் கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தாக்கல் செய்தார்.


இந்த மசோதாவில், இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனை குழு அமைக்கப்படும்’ என்று விளக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தீவிர எதிர்ப்புக்கு மத்தியில் அந்த மசோதா இன்று நிறைவேறியது. இந்த மசோதாகுறித்து பேசிய அ.தி.மு.க எம்.பி ரவிந்திரநாத், ‘நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க உறுதியாக இருப்பதால், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...