நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய மருத்துவ ஆணைய மசோதா!

நாடாளுமன்றத்தில் உபா சட்டத் திருத்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது.

Web Desk | news18
Updated: August 2, 2019, 8:10 AM IST
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய மருத்துவ ஆணைய மசோதா!
மாநிலங்களவை
Web Desk | news18
Updated: August 2, 2019, 8:10 AM IST
மாநிலங்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேறியது. அடுத்த 3 ஆண்டுகளில் எக்சிட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதா, மக்களவையில் கடந்த 29-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவை, மாநிலங்களவையில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் நேற்று தாக்கல் செய்தார்.

இதன் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, நீட் மற்றும் நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.


நீட் மற்றும் நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வுகளுக்காக பயிற்சி மையங்கள் நடத்துவோரை கோடீஸ்வரர்களாக மாற்ற மட்டுமே இந்த மசோதா உதவுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் குற்றம்சாட்டினார்.

விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், நீட் தேர்வு நடத்தும் அமைப்பு, 13 மொழிகளில் தேர்வை நடத்தி வருவதாக தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த 3 ஆண்டுகளில் முதுநிலை படிப்புகளுக்கான நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.

ஆனால், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

Loading...

இதனிடையே, மக்களவையில் போக்சோ சட்டத் திருத்த மசோதாவை குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிமுகம் செய்து வைத்தார். இந்த மசோதாவின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இதன் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, இதனை நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போக்சோ வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

எனினும், நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை மத்திய அரசு நிராகரித்ததால், மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, மாநிலங்களவையில் உபா சட்டத்திருத்த மசோதாவை உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிமுகம் செய்தார். அப்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த சட்டம், சாதாரண மற்றும் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால், இதனை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து, உபா சட்டத் திருத்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பாஜக எம்பிக்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also see... அதிமுக ஆதரவோடு முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...