Home /News /national /

தேசிய கணித தினம் 2021: உலகம் போற்றும் கணித மேதை ராமானுஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்!

தேசிய கணித தினம் 2021: உலகம் போற்றும் கணித மேதை ராமானுஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்!

கணித மேதை ராமானுஜர்

கணித மேதை ராமானுஜர்

இந்தக் கணித அறிவு ஜீவி பற்றி நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் பொன்மொழிகள்.,

உலகமே போற்றி வியந்து பார்க்கும் கணித மேதை ராமானுஜரின் பிறந்த நாள் இந்தியாவில், தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணிதத்தில் பின்தங்கியிருந்த இந்தியாவை தலைநிமிரச் செய்து, உலக அளவில் கணித மேம்பாட்டுக்கு வித்திட்டவர் சீனிவாசா ராமானுஜர்.

1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜர். இந்த நாட்டின் ‘பிரில்லியன்ட் மைண்ட்ஸ்’ என்று கூறப்படும் பிரமிக்க வைக்கும் திறமை கொண்ட நபர்களில் ஸ்ரீனிவாச ராமானுஜருக்கு தனி இடம் உண்டு.

சீனிவாச ராமானுஜரின் வியக்கவைக்கும் கணித அறிவை அனைவரும் தெரிந்து கொள்வதற்காகவும், இளைஞர்களிடையே கணிதம் பற்றிய ஆர்வத்தை வளர்ப்பதற்காகவும் ராமானுஜரின் பிறந்த தினத்தை தேசிய கணித தினமாக மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். ராமானுஜரின் அற்புதமான பணி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு கணிதம் எவ்வளவு முக்கியமாக இருந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது.

ALSO READ |  காங்கிரஸ் மீது மறைமுக அதிருப்தியை வெளிப்படுத்திய மூத்த தலைவர் - காங்கிரஸுக்கு சோதனை மேல் சோதனை

இந்தக் கணித அறிவு ஜீவி பற்றி நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் பொன்மொழிகள்., பெரிதாக உதவியும் ஆதரவும் இல்லாமல் தன்னுடைய கணிதத் திறனை மேம்படுத்திய ராமானுஜர், 13 வயதிலேயே எந்த உதவியும் இன்றி மிகவும் சிக்கலான Loney’s Trigonometry கணக்குகளுக்கு தீர்வு கண்டார். கணிதத்தில் இவருடைய அறிவைப் பார்த்து, பள்ளியில் இவரிடம் யாருமே பழகவில்லை மற்றும் ஒரு போட்டியாளராகத் தான் நினைத்தனர். எனவே, ராமானுஜருக்கு பள்ளி காலத்தில் நண்பர்களே இல்லை

ALSO READ |  6 மாசத்துல எப்படிம்மா குழந்தை.. மருமகளை விரட்டியடித்த மாமியார் - நீதிமன்றத்தில் வெளிவந்த மாப்பிள்ளையின் லீலை

கணிதத்தில் மிகச் சிறந்து விளங்கிய ராமானுஜருக்கு மற்ற பாடங்களைப் படிக்க முடியவில்லை. எனவே மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், இவரால் படிப்பை முடித்து டிகிரி பெற முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் ‘நாமக்கல்’ என்ற ஒரு இந்து பெண் கடவுள், கனவில் தனக்குக் கணித சூத்திரங்களையும் கேள்விகளையும் கொடுத்து வந்ததாகவும், விழிப்புடன் இருக்கும் போது அதற்குத் தீர்வு கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Srinivasa Ramanujan
கணித மேதை ராமானுஜர்


1918 ஆம் ஆண்டில் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோவாக கௌரவிக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் இவர்.

சீனிவாச ராமானுஜர் பொன்மொழிகள் :

ராமானுஜரைப் பொருத்தவரை கணிதம் என்பது கடவுளுக்கு சமமானது. எனவே எல்லா கணக்கு ஈக்வேஷன்களும் கடவுளுடைய சிந்தனைகள் என்று கருதினார். "என்னைப் பொறுத்தவரை, ஒரு ஈக்வேஷன் என்பது ஒரு கடவுள் வெளிப்படுத்திய ஒரு சிந்தனை தான்" என்று கூறியுள்ளார்.

ALSO READ |  அமலாக்கத்துறை சாட்சியாக மாறும் பாலிவுட் நடிகை - ₹200 கோடி மோசடி வழக்கில் திருப்பம்

GH ஹார்டி, 1729 எண்ணை மிக மிகச் சாதாரணமான, சுவாரஸ்யமே இல்லாத ஒரு எண்ணாக கூறியிருந்தார். ஆனால் கணிதமேதை ராமானுஜர் அந்த ஏன் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்.

1729 = 13 + 123 = 93 + 103

“இல்லை. இது மிகவும் சுவாரஸ்யமான எண். இது இரண்டு கியூப் எண்களின் கூட்டலை, இரண்டு விதமாக வெளிப்படுத்தும் போது கிடைக்கும் மிகச்சிறிய எண் ஆகும்” என்று தெரிவித்தார். கணிதத்தில் மட்டுமல்ல, வார்த்தை விளையாட்டிலும் தேர்ந்தவர் என்று ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தினார்.“சென்னையில் இருக்கும் போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில், அக்கவுண்ட்ஸ் துறையில் நான் ஒரு கிளார்க்காக வேலை பார்க்கிறேன் என்று பணிவோடு என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். பள்ளி முடிந்த பிறகு, பணியில் சேர்ந்தா நான், ஓய்வு கிடைக்கும் போது கணிதத்தில் செலவிடுவேன்” என்று எழுதியிருந்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

அடுத்த செய்தி