Home /News /national /

இந்தியாவில் விற்கப்படும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்... எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் விற்கப்படும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்... எவ்வளவு தெரியுமா?


உலகின் விலை உயர்ந்த மாம்பழம்

உலகின் விலை உயர்ந்த மாம்பழம்

Mango in India : இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவைமிகுந்த பழங்களுக்கான தேர்வில் மாம்பழம் முதலிடத்தை பிடித்துள்ளது.

    உலக மாம்பழ தினம் ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் அதே போல கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் அனைத்துப் பழங்களின் ராஜாவாகக் கருதப்படும் மாம்பழத்திற்கான விழா இந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவைமிகுந்த பழங்களுக்கான தேர்வில் மாம்பழம் முதலிடத்தை பிடித்துள்ளது.

    இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் மாம்பழம் மக்களின் கலாச்சார உணர்வுகளோடும் கலந்துள்ளது. தமிழகத்தில் முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களின் மக்களும் மாம்பழத்தை பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.

    விலை உயர்ந்த மாம்பழம் : 

    என்னதான் நாடு முழுவதிலும் மாம்பழ வெரைட்டிகள் உண்டு என்றாலும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் விளைவிக்கப்படும் மாம்பழத்திற்கு தனிச் சிறப்புகள் உண்டு. இங்கு விளையும் மாம்பழம் ஒரு கிலோ ரூ.20,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை உயர்ந்த மாம்பழம்


    இந்த மாம்பழ ரகத்தின் பெயர் மியாசாகி மாம்பழம் ஆகும். உண்மையில் இது ஜப்பான் நாட்டின் மியாசாகி நகரை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.7 லட்சம் வரையில் விலை போகிறது.

    ALSO READ | 'ஷீரடி சாய்பாபாவிற்கு வைரம் பதித்த தங்க கிரீடம்' 80 வயதில் ஆசையை நிறைவேற்றிய மருத்துவர் !

    முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் மியாசாகி மாம்பழத்தை விளைவிக்கும் விவசாயி ஒருவர், அந்த மரத்தையும், மாங்காய்களையும் பாதுகாக்கும் பொருட்டு அதற்கு 4 காவலர்களையும், 6 நாய்களையும் பணியமர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரிய மாம்பழத்தை விளைவிக்கும் ராணி மற்றும் சங்கல்ப பரிஹார் : 

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராணி மற்றும் சங்கல்ப பரிஹார் குடும்பத்தினர் இந்த அரிய வகை மாமரங்களை வளர்த்து வருகின்றனர். ரூபி நிறத்தில் உள்ள இந்த மாங்கனிகளை ஜப்பானியில் சூரியணின் முட்டை என்று கருதுகின்றனர்.

     



     

    முன்னதாக, இந்த மாம்பழ ரகம் எவ்வளவு விலை உயர்ந்தது என்ற உண்மையை அறியாமலேயே சங்கல்ப பரிஹார் அதனை வளர்க்கத் தொடங்கினார். ஒருமுறை சென்னை நோக்கி அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, முகம் தெரியாத சக பயணி ஒருவர் அந்த மாமரக் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கினார் என்றும், அதை குழந்தையை போல வளர்த்தெடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார் என்று சங்கல்ப பரிஹார் தெரிவிக்கிறார்.

    ALSO READ | வீட்டு நாயை குளிக்க வைக்க மறுத்த கன்மேனை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.. அதிரடி காட்டிய ஐ.ஜி!
     அந்த மரக் கன்றுகளை அவர் தனது தோட்டத்தில் வளர்த்து வந்த நிலையில், அதில் காய்த்த மாம்பழங்கள் குறித்த புகழ் ஊர் முழுவதும் பரவியது. அந்த சமயத்தில் சில திருடர்கள் தோட்டத்திற்குள் புகுந்து மாங்கனிகளை திருட முயன்றனர். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறையும் மாம்பழ சீசனில் மரத்திற்கு பாதுகாப்பு போட்டு அவர் அதை பாதுகாத்து வருகிறார். இவரது தோட்டத்தில் தற்போது மியாசாகி ரகத்தில் இரண்டு மாமரக் கன்றுகள் இருக்கின்றன.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: India, Mango

    அடுத்த செய்தி