Home /News /national /

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்கக் கோரிக்கை.. சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு ராகுல் கடிதம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்கக் கோரிக்கை.. சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு ராகுல் கடிதம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்கக் கோரிய ராகுல் காந்தி... சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு அமலாக்கத் துறைக்கு கடிதம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காலஅவகாசம் வழங்கக் கோரிய ராகுல் காந்தி... சோனியாவின் உடல்நிலையை குறிப்பிட்டு அமலாக்கத் துறைக்கு கடிதம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.

    நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை ஆஜராக அமலாக்கத்துறை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இந்நிலையில் நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கேரள மாநிலத்தில் ஆளுநர் மாளிகையை நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை தாண்டி முன்னேறிய காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல்துறையினர் தண்ணிர் பீய்ச்சியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    சென்னை சின்னமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தியை மோசமான குற்றவாளியை போல் நடத்துவதாக கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, மத்திய ஏஜென்சிகளுக்கு அஞ்சி நேஷனல் ஹெரால்டை பாஜகவிற்கு எழுதி தர முடியாது என விமர்சித்தார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, National herald, Rahul gandhi, Sonia Gandhi

    அடுத்த செய்தி