Home /News /national /

யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்.. கொதிக்கும் காங்கிரஸ் - எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு

யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்.. கொதிக்கும் காங்கிரஸ் - எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு

அமலாக்கத்துறை நடவடிக்கை

அமலாக்கத்துறை நடவடிக்கை

National Herald case : காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை சீல் வைத்துள்ள நிலையில், இன்று எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    பண மோசடி நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, 'யங் இந்தியா' நிறுவனத்தின் இயக்குநா்களாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள 'நேஷனல் ஹெரால்டு' தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று சோதனை நடத்தியது.

    இந்நிலையில், ஹெரால்டு ஹவுசில் உள்ள யங் இந்தியா அலுவலகத்தை பூட்டி அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர். அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடும் என்பதால், அக்கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் சோனியா இல்லம் அமைந்துள்ள ஜன்பத் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

     



    இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்புவதால், தங்களை முடக்கும் நோக்கில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.45 மணியளவில் காங்கிரஸ் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகல் வெளியாகியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    அடுத்த செய்தி