ஹோம் /நியூஸ் /இந்தியா /

சுற்றுச்சூழல் சீர்கேடு : பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

சுற்றுச்சூழல் சீர்கேடு : பஞ்சாப் அரசுக்கு ரூ.2,180 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

பஞ்சாப் அரசுக்கு அபராதம்

பஞ்சாப் அரசுக்கு அபராதம்

ஏற்கனவே 100 கோடி ரூபாய் செலுத்திவிட்டதால் 2 ஆயிரத்து 80 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் செலுத்த பஞ்சாப் அரசுக்கு அறிவுறுத்தல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Punjab, India

  திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநிலங்களில் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  Also Read:  பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த பாஜக பிரமுகர் மகன் கைது!

  அப்போது, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் வெளியேறுவதை தடுக்கத் தவறியதற்காகவும், குப்பைகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கத் தவறிய காரணத்திற்காகவும் 2 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏற்கனவே 100 கோடி ரூபாய் செலுத்திவிட்டதால், 2 ஆயிரத்து 80 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் செலுத்த அறிவுறுத்தினார். இந்த நிதியை சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காகவும், கழிவு நீர் மேலாண்மை அமைப்புகளை ஏற்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Aam Aadmi Party, National Green Tribunals, Punjab