Home /News /national /

தேசிய பெண் குழந்தைகள் தினம்- இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்படுகிறதா?

தேசிய பெண் குழந்தைகள் தினம்- இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்படுகிறதா?

மாதிரி படம்

மாதிரி படம்

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்ட நிலையில் பெண்களுக்கான உரிமைகள் இந்தியாவில் எந்த அளவில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

    தேசிய பெண் குழந்தைகள் தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கிறதா என்பது குறித்த சில புள்ளி விவரங்களை தற்போது பார்க்கலாம்..

    தேசிய பெண் குழந்தைகள் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. எனினும், பெண் குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    2019-21 புள்ளி விவரப்படி, 6 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகளில் 71.8 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகின்றனர். எனினும், 10 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிக் கல்வி பெறும் பெண்களின் அளவு 41 சதவிகிதம்தான். அதுவே, ஆண்களின் சதவிகிதம் 50.2 சதவிகிதமாக உள்ளது.

    படிப்பறிவு கொண்ட பெண்களின் அளவு 71.5 சதவீதமாக இருக்கும் நிலையில், ஆண்களின் சதவீதம் 84.4-ஆக உள்ளது. இணைய வசதியைப் பயன்படுத்தும் பெண்களின் அளவு வெறும் 33.3 சதவீதமாக இருக்கும் நிலையில், இணையத்தைப் பயன்படுத்தும் ஆண்களின் சதவீதம் 57.1-ஆக உள்ளது.

    20 முதல் 24 வயதிற்குள்ளான பெண்களில் 23.3 சதவிகிதத்தினர் 18 வயதிற்கு முன்பாகவே திருமணமானவர்கள் என்கிறது தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை. ஆண்களில் திருமண வயதான 21-க்கு முன்பாக திருமணமானவர்களும் இருக்கின்றனர். 25-லிருந்து 29 வயதிற்குள்ளான ஆண்களில் 17.7 சதவிகிதத்தினர் திருமண வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.

    இந்தியாவில் குழந்தை திருமணத்திற்குள் தள்ளப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22 கோடி. 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்தால் சட்ட விரோதம் எனக் கூறும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் குழந்தைகளுக்கு திருமணம் நிகழ்வதாக UNICEF புள்ளி விவரம் கூறுகிறது.

    15 முதல் 19 வயதுடையவர்களில் 59 சதவிகித பெண்கள் ரத்த சோகையுடன் இருக்கும் நிலையில், 31 சதவிகித ஆண்களும் ரத்த சோகையுடன் இருக்கிறார்கள்.

    உலக பெண் குழந்தைகள் தினம் - கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு


    பாலின வேறுபாடுகளைக் களைந்து, அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் சமத்துவம் கண்ட 156 உலக நாடுகளின் பட்டியலில் 140-ஆவது இடத்தில்தான் இந்தியா உள்ளது.


    அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று கருதப்பட்டாலும், அந்த இடத்திற்கு வர ஆண்களைவிட பெண்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது என்பதை மறுக்க முடியாது. இந்த சமமற்ற நிலையைத் தான் நமது அடுத்த தலைமுறைக்காக நாம் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Women

    அடுத்த செய்தி