Home /News /national /

தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை.. மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை.. மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

தேசிய சின்னம் சர்ச்சை

தேசிய சின்னம் சர்ச்சை

National Emblem Controversy : சாரநாத் தூணில் காணப்படும் சிங்க உருவம் சாந்தமானதாக இருக்கும். ஆனால் புதிய தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்க முகம் மனித வேட்டைக்கு காத்திருப்பது போல் காணப்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

    புதிய நாடாளுமன்றத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நான்கு சிங்கங்கள் கொண்ட தேசிய சின்னம், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    1,700 ஆண்டுகளுக்கு முன் புத்தபிரான் முதல் முதலாக உரை நிகழ்த்தியபோது நான்கு தர்மங்கள் குறித்து போதித்த இடம் சாரநாத் ஆகும். அது தற்போதைய உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. புத்தபிரானின் முதல் உரை நிகழ்ந்த அந்த புண்ணிய தலத்தில் மெளரிய அரசன் அசோக சக்ரவர்த்தி நான்கு சிங்கங்களைக் கொண்ட தூணை அமைத்தார். நாடு சுதந்திரம் அடைந்ததும் சாரநாத் தூணில் இடம்பெற்ற அந்த நான்கு சிங்கங்கள் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அது அரசு வெளியிட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களிலும் இடம்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்பகுதியில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டது. 6.5 மீட்டர் உயரம் கொண்ட 9,500 கிலோ எடை கொண்ட தேசிய சின்னத்தின் வெண்கல சிலையை பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை அன்றூ திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் அந்த சிலையை சுற்றி தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களைப் போல் அல்லாமல் இது மாறுபட்டு இருப்பதாகவும், சிங்கங்கள் வாயைப் பிளந்து இருப்பது போன்று காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

     



    இது தொடர்பாக லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் வழக்கமான சாரநாத் தூணில் காணப்படும் சிங்க உருவம் சாந்தமானதாக இருக்கும். ஆனால் புதிய தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்க முகம் மனித வேட்டைக்கு காத்திருப்பது போல் காணப்படுகிறதென விமர்சித்துள்ளது.

     



    காளி சர்ச்சையில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பழைய சின்னத்தையும், புதிய சிங்கச்சின்னத்தையும் டிவிட்டரில் பதிவிட்டு மெளனமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய், இது தனிப்பட்ட நபரின் விருப்பம் தொடர்புடையதல்ல தேசிய சின்னம் என சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் மறுதரப்போ நிகழ்ச்சிக்கு தங்கள் கட்சியினரை அழைக்கவில்லை என்ற கோபத்தில் இவ்வாறான விமர்சனங்களை அவர்கள் முன்வைப்பதாக விளக்கம் தரப்படுகிறது. எனினும் புதிய சின்னத்தை வடிவமைத்தவர்களோ விதிகள் எதுவும் மீறப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Mahua Moitra, Modi, MODI GOVERNMENT, National

    அடுத்த செய்தி