நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட்..

நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட்..

கோப்புப்படம்

முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது.ஷூக்கள் அணியக்கூடாது. ஸ்லிப்பர், சாண்டல்ஸ் போன்ற உயரம் குறைந்த செருப்பு வகைகள் அணியலாம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

  மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, இன்று  நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஒரு அறைக்கு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்றினால் பின்பற்றப்படும்  சமூக விலகல் விதிகள் காரணமாக 24-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அனுமதிச் சீட்டில்,  கொரோனா நடைமுறைகளைப் பற்றி  குறிக்கப்பட்டிருக்கும். தேர்வு அறைக்குள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருட்கள் குறித்து அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 11 மணி முதல் 11.30 மணிவரை, மாறுபட்ட  ஸ்லாட் நேரப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

  முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது.ஷூக்கள் அணியக்கூடாது. ஸ்லிப்பர், சாண்டல்ஸ் போன்ற உயரம் குறைந்த செருப்பு வகைகள் அணியலாம்.
  Published by:Gunavathy
  First published: