• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நிர்வாண பூஜை நடத்தி பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது

நிர்வாண பூஜை நடத்தி பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள இந்த சம்பவத்திற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது தான் உச்சபட்ச கொடுமை.

  • Share this:
    நிர்வாண பூஜை நடத்தினால் பணம் அதிகம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் நாசிக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நாசிக்கில் போலி சாமியார் ஒருவர் பெண்ணை நிர்வாணப்படுத்தி பூஜை நடத்தி அவரை பலமுறை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்த நிலையில் போலீசார் சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர். நாசிக்கில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள இந்த சம்பவத்திற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளது தான் உச்சபட்ச கொடுமை.

    போலி சாமியாரை கைது செய்த கந்துபூர் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட சாமியார் தனது 2 உதவியாளர்களுடன் அந்த பெண்ணை கடந்த 7 மாதங்களாக சித்ரவதை செய்துள்ளார். சாமியாரின் உதவியாளர்கள் இருவரும் பாதிக்கப்ப்ட்ட பெண்ணின் கணவருக்கு முதலில் அறிமுகமாகி உள்ளார்.

    இதையடுத்து அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமானால் சாமியார் சொல்லும் பரிகாரங்களை செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர். சாமியாரின் பூஜை நடத்தும் போது பாதிக்கப்பட்ட பெண் ஆடைகளை கழைந்து நிர்வணமாக அமர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

    Also Read  : ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் - கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!

    பாதிக்கப்பட்ட பெண் பல முறை சாமியாரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த 7 மாதங்களாக அவர் பல சித்ரவதைகளை அனுபவித்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது சம்பந்தம் உள்ளதா, வேறு பல பெண்களையும் சாமியார் பலாத்காரம் செய்துள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: