வட இந்தியா முழுவதும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதற்கான காரணத்தை நாசாவின் விண்வெளிப் புகைப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
இன்று காலை முதல் டெல்லியில் அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள ஜஹாகிபுரி, பஞ்சாபி பாக் மற்றும் வசிர்பூர் பகுதிகளிலும் காற்று அதிகப்படியாக மாசடைந்துள்ளது. காற்றின் தரத்தை அறிய உதவும் குறியீட்டில் மிதமான மாசுபாடிலிருந்து மிகவும் மோசமான மாசுபாடு என்ற நிலைக்கு வட இந்திய மாநிலங்களின் காற்றின் தரம் வீழ்ந்துள்ளது.

நெருப்புப் படலம் சிவப்புப் புள்ளிகளாகத் தெரிகிறது.
இதற்கான முக்கியக் காரணமே அதிக நெருப்புப்புகை ஏற்பட்டிருப்பதால் மட்டுமே என விளக்குகிறது நாசா வெளியிட்டுள்ள புகைப்படம். பல விவசாய நிலங்கள் எரிந்து வருவதன் காரணத்தாலே வட இந்திய மாநிலங்களில் காற்றின் தரம் வீழ்ந்துள்ளதற்கான காரணமாக விளக்கப்படுகிறது. தசரா பண்டிகை சமயம் என்பதாலும் கடந்த ஐந்து நாட்களாக காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளதாக அந்த விண்வெளிப் புகைப்படம் விளக்குகிறது.
வட இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் காற்றின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மற்றபடி வட கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இப்பிரச்னை இல்லை என்றே மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியின் மாசுக்குக் காரணமே ஹரியானாவில் எரியும் வயல்கள்தான் என்றுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும் பார்க்க: எத்தியோப்பிய பிரதமருக்கு 2019-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!
சிவகங்கை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.