• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது? நாசா தகவல்

விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது? நாசா தகவல்

நாசா வெளியிட்ட புகைப்படம்

நாசா வெளியிட்ட புகைப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

ஜூலை 22-ம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், செப்டம்பர் 7 அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் கால்பதிக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடனான தொலைத்தொடர்பை விக்ரம் 2 லேண்டர் இழந்தது. வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

ஆர்பிட்டர் எடுத்தனுப்பிய புகைப்படங்களில் நிலவின் பரப்பில் சாய்ந்த நிலையில் லேண்டர் விழுந்து கிடப்பதை மட்டுமே உறுதி செய்ய முடிந்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் உதவியையும் இந்தியா கோரியிருந்தது. ஆனால் நாசாவாலும் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என முதலில் தகவல்கள் வெளியாகின, இதனை நாசாவும் தற்போது உறுதி செய்துள்ளது.

லேண்டர் தரையிறங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கில் நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்ததாகவும், அந்த புகைப்படங்களில் இருந்து லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை கண்டறிய முடியவில்லை எனவும் நாசா ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.



Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: