ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நரேஷ் கோயல், மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் வெளிநாடு செல்லமுடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில மாத காலமாக நிதி நெருக்கடியில் தவித்துவருகிறது. கடன்சுமை, குத்தகை மற்றும் சம்பள பாக்கி போன்ற நிதிப் பிரச்னைகள் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதில், பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், ஜெட் நிறுவனர் நரேஸ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயலும் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்வதற்காக மும்பை விமானநிலையத்துக்கு சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் விமானநிலையத்திலேயே சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுள்ளனர். அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறிவிட்டனர்.
விமானம் பாதையிலிருந்து கிளம்பத் தயாரானபோது, விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர், இருவரும் விமானத்திலிருந்து இறங்கப்பட்டனர்’ என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியது மீதமிருப்பதன் காரணமாக அவர்கள் வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்கள், வெளிநாடு தப்பிடாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jet Airways