மோடி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்..! புதிய ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் ராகுல் காந்தி

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, ஒப்பந்தம் கிடைக்கும் என்று அனில் அம்பானிக்கு எப்படித் தெரிந்தது என்று மோடி பதிலளிக்கவேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மோடி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்..! புதிய ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
  • News18
  • Last Updated: February 12, 2019, 12:37 PM IST
  • Share this:
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி இடைத் தரகராக செயல்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தசால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகிறார். இந்த விவகாரத்தில் நேரடியாக பிரதமர் மோடி தலையிட்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டிவருகிறார்.

எனவே, ரஃபேல் விவகாரம் பிரதமர் மோடிக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்துவருகிறது.


Modi, மோடி
பிரதமர் மோடி


இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ஒற்றர்கள் போல மோடி செயல்பட்டுள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான விவகாரங்களை அவர் சிலரிடம் பகிரந்துள்ளார். தேசிய விவகாரங்களைப் பாதுகாப்பேன் என்று அவர் உறுதிமொழி எடுத்துள்ளார். அவர் துரோகம் செய்துள்ளார்.

'பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரை அனில் அம்பானி நேரில் சந்தித்தார். ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே, ரஃபேல் ஒப்பந்தத்தை பெறப்போவதாக தெரிவித்தார்' என்று ஏர்பஸ் நிறுவன அதிகாரி அனுப்பிய மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல செயல்பட்டுள்ளார்.ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, ஒப்பந்தம் கிடைக்கும் என்று அனில் அம்பானிக்கு எப்படித் தெரிந்தது என்று மோடி பதிலளிக்கவேண்டும்.



இந்த விவகாரம், பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை செயலாளர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அனில் அம்பானிக்குத் தெரிந்துள்ளது. இது உண்மையென்றால், அரசு விவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.



மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஏர்பஸ் நிறுவன அதிகாரி அனுப்பிய மெயில் ஆதாரத்தையும் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி காண்பித்தார்.

Also see:

First published: February 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading