தற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என இந்திய பல்கலைக்கழகங்கள் சங்க கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 • Share this:
  இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகிறது என இந்திய பல்கலைக்கழகங்கள் சங்க கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

  இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95ஆவது ஆண்டு கூட்டம், துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாறினார். அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

  கூட்டத்தில் பேசிய பிரதமர், “இந்தியா தற்சார்பு பாதையில் பயணிப்பதில், திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. நாட்டின் ஜனநாயக பாதைக்கு வலுவான அடித்தளத்தை, அண்ணல் அம்பேத்கர் அமைத்து கொடுத்திருக்கிறார்.

  அம்பேத்கர் அமைத்து கொடுத்த பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டியது, நமது கல்வி அமைப்பின் முக்கிய கடமை ஆகும். மாணவர்கள் எதை அடைய முடியும் என்பது அவர்களின் உள் வலிமையைப் பொறுத்தது. கல்வி நிறுவனங்கள் அவர்களின் வலிமைக்கு துணைபுரிந்தால், அவர்கள் விரும்புவதை அவர்களால் நிச்சயம் நிறைவேற்ற முடியும்.

  மாணவர்களுக்கான 3 கேள்விகளை ஆசிரியர்கள் ஆராய வேண்டும், அவர்கள் எப்படிப்பட்ட திறமையைக் கொண்டவர்கள், அவர்கள் அதிக ஆர்வத்துடன் எதை அடைய விரும்புகிறார்கள் என்பதுடன் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறியவேண்டும்.” என்று கூறினார்.

  இந்த கூட்டத்தில் குஜராத் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உயர்கல்வி முன்னணி அமைப்பான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது 95ஆவது ஆண்டு கூட்டத்தை இந்தாண்டு ஏப்ரல் 14, 15ஆகிய தேதிகளில் நடத்துகிறது.

  Must Read :  நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த பெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்: டிடிவி தினகரன் கண்டனம்

   

  அது தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவும், எதிர்கால திட்ட நடவடிக்கைகளை வரையறை செய்யவும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: