• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சொந்தத் தொகுதியில் பிரதமர் மோடி... ₹ 1000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

சொந்தத் தொகுதியில் பிரதமர் மோடி... ₹ 1000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

  • News18
  • Last Updated :
  • Share this:
    உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் மோடி, தீனதயாள் உபத்யாய நினைவு மையத்தையும், அவரது சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, ’Kashi Mahakal Express’ ரயிலை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

    வாரணாசி மற்றும் இந்தூர் இடையிலான இந்த ரயில், வாரம் 3 முறை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வழித்தடம் 3 ஜோதிர்லிங்க தலங்களை இணைக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது

    வாரணாசியில் 460 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மேலும், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 30 திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

    பிரதமரின் வருகையை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் 18 நிபுணர்கள் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: