ஹோம் /நியூஸ் /இந்தியா /

71,000 விளக்குகள், 14 கோடி ரேஷன் பைகள் - மோடியின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடத் தயாராகும் பா.ஜ.க

71,000 விளக்குகள், 14 கோடி ரேஷன் பைகள் - மோடியின் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடத் தயாராகும் பா.ஜ.க

மோடி

மோடி

நாடு தழுவிய அளவில் பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாட பா.ஜ.கவினர் தயாராகியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் நாளை(செப்டம்பர் 17) வரவுள்ளது. மோடியின் 71-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு பா.ஜ.கவினர் தயாராகிவருகின்றனர். 71-வது பிறந்தநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள பாரத் மாதா கோயிலில் 71,000 விளக்குகளை ஏற்றி பூஜை செய்ய பா.ஜ.கவினர் முடிவு செய்துள்ளனர்.

  அதேநேரத்தில், பா.ஜ.கவினர் நன்றி மோடிஜி என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட ரேஷன் பையை நாடு முழுவதும் 14 கோடி பேருக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள அஞ்சல் அலுவலகத்திலிருந்து மோடி உருவம் பொறிக்கப்பட்ட 3 கோடி அஞ்சல் அட்டைகளை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளனர்.

  இந்த ஆண்டு மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டுள்ள பா.ஜ.கவினர் நாடு முழுவதும் ரத்த தான முகாம், ஆறுகளைச் சுத்தம் செய்தல், ரேஷன் கார்டுகள் வழங்குதல் உள்ளிட்ட பல நலத் திட்டங்கள் மூலம் கொண்டாடவுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாளை முதல் அக்டோபர் 7-ம் தேதி வரையில் 20 நாள்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தவும் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 27,000 மையங்களில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Modi Birthday, Narendra Modi