Home /News /national /

மோடியுடன் சேர்ந்து கிரண்பேடி சதி செய்தார்! நாராயணசாமி குற்றச்சாட்டு

மோடியுடன் சேர்ந்து கிரண்பேடி சதி செய்தார்! நாராயணசாமி குற்றச்சாட்டு

நாராயணசாமி

நாராயணசாமி

விவசாய கடன் தள்ளுபடி நிறுத்தம், காவலர் பணியிடம் நிரப்புவதை தடுத்தல், ஆசிரியர் மற்றும் செலிவியர் நியமனம் ஒன்றரை ஆண்டாக நிறுத்தம், இலவச அரிசி திட்டம் நிறுத்தம் என பல திட்டங்களைக் கிரண்பேடி தடுத்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கூடாது என்றும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த பிரதமருடன் சேர்ந்து கிரண்பேடி திட்டமிட்ட சதி செய்ததாக முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அரசின் ரகசியங்களை சமூக வலைதளத்தில் கசிய விடுவதாகவும் உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதகத்திற்கு 2 பதில்கள் வந்தன. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

    ஆளுநருக்கு தனி அதிகாரமில்லை. முதல்வர், அமைச்சர்களின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொள்கை ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே ஆளுநரின் அனுமதியை பெற வேண்டும். மற்ற விஷயங்களுக்கு கோப்புகளை அனுப்ப தேவையில்லை. தெரிவித்தால் போதும். ஆளுநரின் உத்தரவின் பேரில் செயலர்கள் செயல்பட கூடாது என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பில் நிதி அதிகாரமும் அமைச்சரவைக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு அல்ல என தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு தான் அதிகாரம் என கூறுவது உண்மை அல்ல. தீர்ப்பின் இறுதியில் 12 பத்தியில் அமைச்சரவைக்கு தான் அதிகாரம். ஆளுநருக்கு இல்லை என தெளிவாக உள்ளதாக கூறிய முதல்வர், உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து கிரண்பேடி அவர்களது சொந்த செலவில் தனிப்பட்ட முறையில் மேல்முறையீடு செய்யலாம். துணைநிலை ஆளுநர் என்ற பெயரில் அவர் மேல்முறையீடு செய்ய கூடாது. எங்களது அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி மேல்முறையீடு செய்ய முடியாது.

    மேல்முறையீடு செய்ய கூடாது என தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெவித்தார். சமூக வலைதளத்தில் புதுச்சேரிக்கு நல்லது செய்துள்ளதாக கிரண்பேடி கூறியுள்ளார். ஏரிகளை தூர்வார அரசு நடவடிக்கை எடுத்த போது ஏரி சங்கத்திடம் அளிக்க கிரண்பேடி உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து ஏரி சங்கம் மூலம் கிரண்பேடி வழக்குத் தொடர்ந்தார்.

    தூர்வார 7 கோடி ரூபாய் இருந்தும் இரண்டு ஆண்டுகளாக வழக்கு மூலம் கிரண்பேடி தடுத்தார். இப்போது அரசு தூர்வாருவது தான் சரி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரு ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதற்கு கிரண்பேடி தான் காரணம். இது தான் புதுச்சேரிக்கு நலனா..? விவசாய கடன் தள்ளுபடி நிறுத்தம், காவலர் பணியிடம் நிரப்புவதை தடுத்தல், ஆசிரியர் மற்றும் செலிவியர் நியமனம் ஒன்றரை ஆண்டாக நிறுத்தம், இலவச அரிசி திட்டம் நிறுத்தம் என பல திட்டங்களைக் கிரண்பேடி தடுத்தார்.

    மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெற கூடாது என்று அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த பிரதமருடன் சேர்ந்து கிரண்பேடி திட்டமிட்டு சதி செய்கிறார். புதுச்சேரி வளர்ச்சிக்குத் தடையாக இருந்த கிரண்பேடி புதுச்சேரிக்கு சாபகேடாக இருந்தார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் செய்த கிரண்பேடி தனது பதவியை ராஜினாமா செய்வது தான் நல்லது. ஆளுநருக்கு அதிகாரமில்லை. அமைச்சரரைக்கு தான் அதிகாரம் என்ற
    உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக எந்த அதிகாரிகள் செயல்பட்டாலும் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும்’ என்று எச்சரிக்கைவிடுத்தார்.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Narayana samy

    அடுத்த செய்தி