ஹோம் /நியூஸ் /இந்தியா /

விவாதத்துக்கு எப்போதும் தயார்! இடத்தை அறிவித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்

விவாதத்துக்கு எப்போதும் தயார்! இடத்தை அறிவித்து கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்

நாராயணசாமி

நாராயணசாமி

அதிகாரப் போட்டியின் உச்சமாக, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பொதுமக்கள் முன்னிலையில் விவாதிப்பதற்கு நாங்கள் எந்த நேரமும் தயாராக இருக்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடிக்கு சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று, 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆளுநர் கிரண்பேடி டெல்லி சென்றுள்ளார். இந்தநிலையில், இந்த விவகார் குறித்த ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பதிவில்,’மரியாதைக்குரிய முதல்வர் மற்றும் அவர்களது அமைச்சர்கள் பொதுமக்கள் முன்னிலையில் விவாதம் நடத்துவதற்கு நேரம், காலம், இடத்தை குறிக்கலாம். அதனை மக்கள் நேரடியாக கேட்கும் வகையில், பிரச்னைகளை புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

தற்போதுவரை, ஆளுநர் அலுலகம் முழுவதும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. மற்றும் ஏழைகளின் நீதிக்காக செயல்படுகிறது’ என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் நாராயணசாமி ட்விட்டர் பதிவில், ‘நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். புதுச்சேரி கடற்கரையில், காந்தி சிலை அருகே விவாதம் நடத்தலாம்’என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த ட்விட்டை, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Narayana samy