• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டி.ஆர்.பாலு, முரசொலி மாறனை தொடர்ந்து மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்ட 3-வது மத்திய அமைச்சர் நாராயண் ரானே

டி.ஆர்.பாலு, முரசொலி மாறனை தொடர்ந்து மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்ட 3-வது மத்திய அமைச்சர் நாராயண் ரானே

மத்திய அமைச்சர் கைது

மத்திய அமைச்சர் கைது

கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே என்பது முக்கியமான ஒன்று.

  • Share this:
    டி.ஆர்.பாலு, முரெசாலி மாறனை தொடர்ந்து 3-வது மத்திய அமைச்சராக நாராயண் ரானே மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ராய்காட் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணே, சுதந்திர தின ஆண்டை தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை, தான் அறைந்திருப்பேன் என்று ஆவேசமாக கூறினார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நாசிக் காவல் நிலையத்தினர் அவரை கைது செய்தனர்.

    இதனைதொடர்ந்து மஹத் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் ராணே ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. 15 ஆயிரம் ரூபாய் சொந்த பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட முதல் மத்திய அமைச்சர் நாராயண் ரானே என்பது முக்கியமான ஒன்று.

    Also Read :  பென்னிகுயிக் இல்லம் ஆதாரம் இருக்கிறதா? பேரவையில் முதலமைச்சர் ஆவேசம்

    இதற்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவு கைதின் போது, அப்போதைய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். அன்று கைது செய்ய உத்தரவிட்டவர் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. இன்று கைது செய்ய உத்தரவிட்டவர் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: