முகப்பு /செய்தி /இந்தியா / நன்றி அண்ணா.. பீகாரில் ஆட்சி மாற்றம் - ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி யாதவ்

நன்றி அண்ணா.. பீகாரில் ஆட்சி மாற்றம் - ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி யாதவ்

நன்றி அண்ணா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் அளித்த தேஜஸ்வி யாதவ்

நன்றி அண்ணா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் அளித்த தேஜஸ்வி யாதவ்

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் புதிய ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பீகாரில் நடைபெற்ற அரசியல் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு நன்றி அண்ணா என ஸ்டாலினுக்கு தேஜஸ்வி நன்றி தெரிவித்துள்ளார்.

பீகாரில் 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைத்தது. அதிக எம்எல்ஏக்களுடன் கூட்டணியில் பெரிய கட்சியாக பாஜகவும்,பாஜகவை விட கணிசமாக குறைவான எம்எல்ஏக்களை நிதீஷ் குமார் கட்சியும் பெற்றிருந்தது. தன்னிடம் அதிக எம்எல்ஏக்கள் இருந்தாலும், முதலமைச்சர் வேட்பாளராக இருந்த நிதீஷ் குமாரையே மீண்டும் முதலமைச்சராக தொடர பாஜக கோரியது. இதையடுத்து பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று சுமார் இரண்டு ஆண்டுகள் நிதீஷ் குமார் ஆட்சி நடத்தி வந்தார்.

இந்நிலையில், தனது கட்சியை பலவீனபடுத்தி தனக்கு எதிராக பாஜக சதி செய்வதாக கூறி நிதீஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். அத்துடன் எதிர்க்கட்சியாக இருந்த ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியோரின் ஆதரவுடன் நிதீஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேஜஸ்வி யாதவ், இந்த புதிய ஆட்சியில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படிங்க: மக்களை சாதி, மத அடிப்படையில் பிரிப்பது நாட்டை பலவீனப்படுத்தும்' - யோகி ஆதித்யநாத்

பீகாரில் புதிதாக உருவாகியுள்ள அரசியல் கூட்டணிக்கும், ஆட்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பீகாரில் மீண்டும் மெகா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக ஸ்டாலின் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், 'நன்றி அண்ணா, நாம் இந்த பிரிவினைவாத, எதேச்சதிகார அரசை ஒன்றிணைந்து எதிர்ப்போம். இந்த பதில் மோதல் இன்று முதல் தொடங்குகிறது' என்று நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார்.

First published:

Tags: Bihar, CM MK Stalin, Lalu prasad yadav