நான் வங்கப்புலி... சிங்கம் போலவும் பதிலடி கொடுக்க முடியும் - மம்தா ஆவேசம்

மம்தா பானர்ஜி

இங்குள்ள கலாச்சாரத்தை நேசிக்காதவர்கள் இங்கே அரசியல் செய்ய முடியாது. ரவுடியிசத்துக்கு நந்திகிராமே உதாரணம்.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. 2-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் இதில் அடக்கம். மம்தாவை முடிந்தால் நந்திகிராமில் போட்டியிட்டு வெற்றிபெற சொல்லுங்கள் என பா.ஜ.கவினர் சவால் விட்டனர். அதன்காரணமாகவே நந்திகிராமில் நிற்பது என்று முடிவில் தீர்க்கமாக உள்ளார் மம்தா. இவரை எதிர்த்து பாஜக தரப்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

  இந்த சுவேந்து அதிகாரி திரிணாமூல் காங்கிரஸில் இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவர் கடந்த டிசம்பர்மாதம் திடீரென பாஜகவுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாகவே நந்திகிராம் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  நந்திகிராம் தொகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா கலந்துக்கொண்டார். அப்போது பேசியவர், “ இங்குள்ள கலாச்சாரத்தை நேசிக்காதவர்கள் இங்கே அரசியல் செய்ய முடியாது. ரவுடியிசத்துக்கு நந்திகிராமே உதாரணம். நாங்கள் ப்ருலியாவில் கூட்டம் நடத்தினால் திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. சுவேந்து அதிகாரி என்ன விரும்புகிறாரோ அதனை செய்து வருகிறார். எனக்கும் விளையாட தெரியும். நான் வங்கப்புலி. என்னால் சிங்கம் போலவும் பதிலடி கொடுக்க முடியும்.

  இந்த நந்திகிராமில் இருக்கும் யாரும் என்னைத் தாக்கவில்லை. நீங்கள் பீகாரில் இருந்தும் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் ஆட்களை கொண்டு வந்து என் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். சுதந்திர மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் வந்தால், இங்கிருக்கும் பெண்கள் பாத்திரங்களை கொண்டு அடிக்க வேண்டும்.” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: