மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் நாடு தழுவிய ஊரடங்கை மோடி அறிவிப்பார்: காங்கிரஸ் பிரமுகர் நானா படோலே

மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் நாடு தழுவிய ஊரடங்கை மோடி அறிவிப்பார்: காங்கிரஸ் பிரமுகர் நானா படோலே

நானா படோலே

மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, கடுமையாக சாடியுள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோலே, மேற்குவங்க தேர்தலுக்கு பின்னர் நாடு தழுவிய முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

 • Share this:

  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது என்பதை, சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ தேர்தல் பிரசார கூட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

  மோடிக்கு மேற்குவங்க தேர்தல்தான் பிரதான பிரச்சினை. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை. மேற்கு வங்கத்தில் தேர்தலை முடித்த பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பார்.

  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. அந்த சமயத்தில் பிரதமர் மோடி முகத்தில் முக கவசம் கூட அணியாமல் பெருமளவு மக்களை கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

  பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பிரச்சாரம் செய்கிறார். மக்களின் உயிரை விட அவருக்கு தேர்தல்தான் முக்கியம். பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்துகொள்வதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு எதை உணர்த்த விரும்புகிறார்?” இவ்வாறு கூறினார்.

  Must Read : ராஜஸ்தானில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

  மேலும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண உதவியை வழங்க அரசு முன்வரவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நானா படோலே, “பட்னாவிசுக்கு உண்மையிலேயே டெல்லியில் ஏதேனும் செல்வாக்கு இருந்தால், அவர் மகாராஷ்டிராவுக்கு வந்துசேர வேண்டிய 90 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் பிற திட்டங்களை பெற்றுத்தருவதாக உறுதி வழங்கவேண்டும்” என்றும் கூறினார்.
  Published by:Suresh V
  First published: