நாட்டை பாஜக விற்பனைக்குக் கொண்டு வந்து விட்டது, 2024-ல் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம்: காங்கிரஸ் தலைவர் சூளுரை

ராகுல் காந்தி

2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றப்பட்டது, 2024-ல் ஆட்சியைப் பிடிப்போம், ராகுல் காந்தி தலைமையில் அடுத்த லோக்சபா தேர்தலில் வெல்வோம் என்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

  • Share this:
    2014ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றப்பட்டது, 2024-ல் ஆட்சியைப் பிடிப்போம், ராகுல் காந்தி தலைமையில் அடுத்த லோக்சபா தேர்தலில் வெல்வோம் என்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சியான பா.ஜனதாவை தாக்கும் பணியே எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. மகா விகாஷ் அகாடி அங்கத்தினரான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசையோ, சிவசேனாவையோ எதிர்க்கும் பணி அல்ல.

    2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள்(காங்கிரஸ்) ஏமாற்றப்பட்டோம். இதை மனதில் வைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தாயாராகி வருகிறோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2024-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். பா.ஜனதா முழு நாட்டை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால் அதேநேரம் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. தேசிய மட்டத்தில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு கட்சிகளும் கூட்டணியை முறித்து தனித்து போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்பு பா.ஜனதா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    Also Read: காலுக்கு மாஸ்க் அணிவித்த உத்தரகண்ட் அமைச்சர்: வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்!

    மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படோலே சில காலமாக சர்ச்சைக்கருத்துகளை கூறி வருகிறார். துணை முதல்வர் அஜித் பவாரையும் கூட்டணியில் இருந்து கொண்டே தாக்கிப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: