நம்பி நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டது விண்வெளித்துறைக்கு விழுந்த அடி - பிரதமர் மோடி

பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டி இன்று மாலை 7 மணிக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் News18Tamil.com இணையதளத்தில் ஒளிபரப்பு ஆகிறது.

news18
Updated: April 9, 2019, 7:23 PM IST
நம்பி நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டது விண்வெளித்துறைக்கு விழுந்த அடி - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: April 9, 2019, 7:23 PM IST
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது போலியான வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டியில், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், நம்பி நாராயணன், சக்ஜுதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டு வெடிப்பு ஆகிய பல விவகாரங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

“சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் மீது தவறான வழக்கு போடப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். இது இந்திய விண்வெளித்துறைக்கே விழுந்த அடியாக இருந்தது. நம்பி நாராயணன் நீதிதானே கேட்டார்?” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மேலும், “சக்ஜுதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவிகள் பல காலம் சிறையில் வைக்கப்பட்டனர். அவர்கள் நீதி கேட்டனர். ஆனால், குண்டு வெடிப்பு என்ற பெயரில் நீங்கள் இந்துக்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்தீர்கள். தாங்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டது ஏன்? என்று அவர்கள் கேட்கின்றனர்.” எனவும் மோடி பேசினார்.

First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...