காவிரி விவகாரம்: அவகாசமா? அவமானமா? கவிதை வெளியிட்ட அதிமுக நாளேடு

news18
Updated: May 4, 2018, 6:21 PM IST
காவிரி விவகாரம்: அவகாசமா? அவமானமா? கவிதை வெளியிட்ட அதிமுக நாளேடு
நமது அம்மா நாளிதழ்
news18
Updated: May 4, 2018, 6:21 PM IST
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டதை கண்டித்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான  ‘புரட்சித்தலைவி அம்மா’வில் கவிதை வெளியாகியுள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை  சமர்பிக்காததால் , உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மே  8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா நாளேட்டில்,  ‘அவகாசமா? அவமானமா?’ என்ற பெயரில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கவிதையில் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைத்து அரசு செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாக்குகளை மனதில் வைத்து வஞ்சகம் புரியலாமா?, தேர்தல் முடிவை நெஞ்சில் வைத்து தீர்ப்புகளை கிடப்பில் இட்டு திரியலாமா என்றும் அந்த கவிதை மத்திய அரசுக்கு கேள்வி எழுப்புகிறது.

இந்தியாவை தாய்நாடு என்று விளிப்பதுமே தான் பெற்ற மாநிலத்து மக்களை சமமாக நடத்துகிற சத்தியத்தில் நிலைக்க வேண்டும் என்பதால் தானே என்றும் அதனை மோடி அரசு முன்னின்று சிதைப்பதா என்றும் பிரதமர் மோடியை அந்த கவிதை நேரடியாக விமர்சித்துள்ளது.
First published: May 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்