பாஜக ஆட்சி புதுச்சேரியில் மலர்வது உறுதி - நமச்சிவாயம்

நமச்சிவாயம்

உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் நரேந்திர மோடி. அவர் தலைமையில் இந்தியா ஒளிர்கிறது. அதுபோல் புதுச்சேரியும் ஒளிரவேண்டும்.

 • Share this:
  முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால் புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுள்ளது என பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 2021ல் பாஜக ஆட்சி புதுச்சேரியில் மலர்வதி உறுதி என்றும் கூறியுள்ளார்.

  காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சிப் பூசலால் அதிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லியில் பாஜகவில் இணைந்தார்.

  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வளமான புதுச்சேரிதான் என் எண்ணம். அதற்காகவே பாஜகவில் இணைந்துள்ளோம். புதுச்சேரிக்கான வளர்ச்சியை நரேந்திர மோடி உருவாக்கிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

  பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். அவர் தலைமையில் இந்தியா ஒளிர்கிறது. அதுபோல் புதுச்சேரியும் ஒளிரவேண்டும் என்பதே எனது நோக்கம்.

  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான செயல்பாடுகளால், புதுச்சேரி பின்னோக்கிச் சென்றுள்ளது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், புதுச்சேரியின் வளர்ச்சிக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

  நிச்சயமாக புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கொண்டுவர பாடுபடுவோம். மக்கள் தயாராக இருக்கின்றனர். 2021ல் பாஜக ஆட்சி மலர்வது உறுதி. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை நிறுவ இரவு பகலாகப் பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க... 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ல் வெளியாகிறது

  சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதாக் கூறி, நமச்சிவாயம் அக்கட்யில் இருந்து நீக்கப்பட்டார். அவர், தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: