முகப்பு /செய்தி /இந்தியா / மர்ம சூட்கேஸில் பெண்ணின் நிர்வாண உடல்.. காட்டிக்கொடுத்த ஆட்டோக்காரர் - அம்பலமான கணவனின் சதி

மர்ம சூட்கேஸில் பெண்ணின் நிர்வாண உடல்.. காட்டிக்கொடுத்த ஆட்டோக்காரர் - அம்பலமான கணவனின் சதி

குருகிராம் காவல்துறையால் கைது செய்யப்பட்ட கணவர் ராகுல்

குருகிராம் காவல்துறையால் கைது செய்யப்பட்ட கணவர் ராகுல்

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து கணவர், அவரின் நிர்வாண உடலை சூட்கேஸ்சில் வைத்து சாலையில் வீசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Gurgaon, India

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள IFFCO சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை கேட்பார் அற்ற நிலையில் ஒரு சூட்கேஸ் மர்மமாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸை காவல்துறை கைப்பற்றி திறந்து பார்க்கையில், நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்ட பெணிண் உடல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

அப்போது சம்பவத்தன்று  மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றுள்ளார். ஆட்டோ எண்ணின் அடையாளத்தை வைத்து ஆட்டோ ஓட்டுநரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அப்போது தான் அங்குள்ள சிர்ஹவுல் என்ற கிராமத்தில் இருந்த அந்த நபர் சவாரிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக சர்ஹவுல் கிராமத்திற்கு சென்று காவல்துறை விசாரித்ததில் தான் உண்மை அம்பலமானது.

அந்த நபரின் பெயர் ராகுல் என்றும் சூட்கேஸ்சில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அவரின் மனைவி பிரியங்கா என்பதை காவல்துறை தெரிந்துகொண்டனர். ராகுலை பிடித்து விசாரித்ததில், 22 வயதான அவருக்கும் 20 வயதான மனைவி பிரியங்காவுக்கும் இரண்டாண்டுகளுக்கும் முன் திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்த ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்துவந்தார்.

ராகுலின் சம்பளம் அடிப்படை செலவுகளுக்கே சரியாக உள்ள நிலையில், மனைவி பிரியங்கா கணவரிடம் செல்போன் வேண்டும், டிவி வேண்டும், பிரிட்ஜ் வேண்டும் என நச்சரித்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மேலும், கோபத்தில் பல முறை கணவரை அறைந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இரவு சண்டை முற்றி அடிதடியானதில் கணவர் ராகுல் மனைவி பிரியங்காவை அடித்து கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: நீ வேலைக்கு போறது பிடிக்கல.. காதல் மனைவியை கொடூரமாக தாக்கி செல்ஃபி எடுத்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்

இரவு முழுக்க மனைவியின் பிணத்தை வீட்டில் வைத்தே குழந்தையோடு பொழுது கழித்த ராகுல், அடுத்த நாள் கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வங்கி வந்துள்ளார். பின்னர் மனைவியின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி சூட்கேசில் உடலை வைத்துள்ளார். அத்துடன் மனைவியின் கையில் கணவர் ராகுலின் பெயர் பச்சை குத்தி இருந்ததால், அந்த பகுதியில் சதையை கத்தியால் கிழித்து நீக்கியுள்ளார். பின்னர் ஆட்டோ பிடித்து ஏறி யாரும் இல்லாத இடத்தில் சூட்கேஸை சத்தமில்லாமல் வைத்து வந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட ராகுலை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.

First published:

Tags: Crime News, Husband Wife, Murder