Home /News /national /

உ.பி.யில் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்ட பெண் சடலம் நிர்வாண நிலையில் மீட்பு!

உ.பி.யில் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்ட பெண் சடலம் நிர்வாண நிலையில் மீட்பு!

News18

News18

  • News18
  • Last Updated :
    உத்தரப்பிரதேசம் மாநிலம் கடார்னியாகட் உயிரியல் சரணாயலம் அருகே ஆசிட் கொண்டு எரிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் கடார்னியாகட் உயிரியல் சரணாயலம் இயங்கி வருகிறது. இந்த வனப்பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் இன்று பிற்பகலில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் போன்ற வேதிப்பொருள் கொண்டு எரிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக அந்த சடலம் இருந்துள்ளது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகள் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்டுள்ளதால் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாக சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கேள்விக்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னரே பதில் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

    இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி