Home /News /national /

மின் கட்டண பில் மோசடி.. செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.1.68 லட்சம்

மின் கட்டண பில் மோசடி.. செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால் பறிபோன ரூ.1.68 லட்சம்

மின் கட்டணத்தை வைத்து சைபர் மோசடிகள்

மின் கட்டணத்தை வைத்து சைபர் மோசடிகள்

குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்களில் மின் கட்டணம் தொடர்பான மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nagpur, India
    மின் கட்டண பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நக்பூரில் ஒரு நபர் ரூ.1.68 லட்சம் தொகையை இழந்துள்ளார். மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் அவாதியா. 46 வயதான இவர் மாநில சுரங்கத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    இவரின் போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மின் கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளையை கட் செய்யப்போகிறோம். முறையான விவரங்களை இந்த ஆப்பில் பார்க்கவும் என வந்துள்ளது. உடனடியாக பதறிப்போய் ராஜேஷ்குமார் அந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய லிங்கை கிளிக் செய்துள்ளார்.

    அந்த லிங்கை கிளிக் செய்த சிறிது நேரத்தில் இவரின் இரு வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.68 லட்சம் தொகை பறிபோயுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த போன ராஜேஷ் அருகே உள்ள காபேர்கேதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சைபர் மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    பொதுவாக, பல்வேறு நகரங்களில் உள்ள மின்சார வாரியம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த நினைவூட்டும் செய்தியை வாட்ஸ்அப் மற்றும் குறுச்செய்திகள் மூலமாக அனுப்பிவருகின்றன. இத்தகைய செய்திகள் முன்னதாகவே மக்களுக்கு அனுப்பப்படும் நிலையில், மின்கட்டணம் செலுத்த கடைசி தேதிக்கு மிக நெருக்கமாக குறுச்செய்திகள் அனுப்பப்படுவது தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: லோன் ஆப் மோசடி - இயங்குவது எப்படி? - முழு ரிப்போர்ட்!

    குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்களில் மின் கட்டணம் தொடர்பான மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாக புகார்கள் பதிவாகியுள்ளது. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி மக்களிடம் சைபர் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Cyber fraud, Electricity bill, Nagpur, Online Frauds

    அடுத்த செய்தி